Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலையில் தை கிருத்திகைக்கு ... சங்கடஹர மங்கள ஆஞ்சநேயருக்கு ஞானபுரி தலத்தில் கும்பாபிஷேகம் சங்கடஹர மங்கள ஆஞ்சநேயருக்கு ஞானபுரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்துடன் ஹிந்து ஆன்மிக கண்காட்சி நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
11:02

சென்னை: ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஹிந்து ஆன்மிக சேவை மையம், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து, 11வது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை, வேளச்சேரி குருநானக் கல்லுாரியில் நடத்தியது.ஜன., 29ம் தேதி முதல் ஜீவராசிகளை பேணுதல்; பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல்; பெண்மையை போற்றுதல்; சுற்றுச்சூழலை பராமரித்தல்; வனம், வனவிலங்குகளை பாதுகாத்தல் ஆகிய, பண்புகளை வலியுறுத்தும் வகையில், கண்காட்சி நடத்தப்பட்டது.கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, நாட்டுப் பற்றை வளர்த்தல் என்ற தலைப்பில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  இதில், நாட்டிற்காக வீரமரணம் அடைந்தோருக்கு, மாணவ - மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில், விவேகானந் தர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், விமானப்படை வீரர் அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் வர்தமான். முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபாலசாமி, மேஜர் ஜெனரல் முரளி கோபாலகிருஷ்ணன், கமாண்டர் ஹரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.அதை தொடர்ந்து, நாட்டியாஞ்சலி, ஐக்யமத்ய ஹோமம், நாட்டுப் பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சி கள் நடந்தன.

நேற்று மாலை, 6:00 மணிக்கு, திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் நடந்தது.இதில், அங்குரார்ப்பணம், ஸ்தல சுத்தி, புண்யாவதனம், சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து மாங்கல்ய தாரணம், அட்சதை போடுதல் ஆகியவை நடந்தன.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீனிவாசப் பெருமாளின் அருளைப் பெற்றனர்.

15 லட்சம் பேர் பங்கேற்பு: பதினோராவது ஹிந்து ஆன்மிக கண்காட்சி குறித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரமாண்டமான அளவில், விழிப்புணர்வு செய்யப்பட்டது.மேலும், நுாற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவியரும் பங்கேற்றனர். இதன் பலனாக, இந்தாண்டு, ஆறு நாட்கள் நடந்த கண்காட்சியை, 15 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar