Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)சந்தோஷச் சாரல் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... சரவணப்பொய்கையை சுத்திகாிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசின் சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
16:41

நல்ல எண்ணம் கொண்ட மீன ராசி நேயர்களே!


சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். புதன் பிப்.22 – மார்ச்11 வரை வக்கிரம் அடைந்து மகர ராசியில் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் பாதகம் இல்லை. சந்திரன் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். திட்டமிட்ட செயல்களைக் கச்சிதமாக முடிக்க சுக்கிரனின் அருள் கிடைக்கும். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா எனச் சென்று வருவீர்கள். பிப்.29க்கு பிறகு பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.

குருபகவான் 10-ம் இடத்தில் இருப்பதால் பொருள் நஷ்டம், மனசஞ்சலம் ஏற்படலாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிப்.25க்கு பிறகு சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். அக்கம் பக்கத்தினரால் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறு ஏற்படலாம்.

பெண்கள் கணவரின் நன்மதிப்பை பெற்று குதுாகலம் காண்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். பிப்.29க்கு பிறகு சுயதொழில் புரியும்  பெண்களுக்கு எதிர்பார்த்ததை விட  லாபம் அதிகரிக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் பிப்.29க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கப் பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
* வியாபாரிகளுக்கு மாத முற்பகுதியில் அனுகூலம் உண்டாகும்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். எதிரி தொல்லை மறையும்.
* அரசு பணியாளர்களுக்கு பிப்.29க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.
* தனியார் துறையில் பணிபுரிவோருக்கு பிப்.22 –  மார்ச்11 வரை அனுகூலமான காலகட்டம்.  பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்.
* வக்கீல்களுக்கு  பிப்.21க்கு பிறகு நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள்  நற்பெயர், மக்கள் மத்தியில் செல்வாக்கையும் பெறுவர்.
* கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சககலைஞர்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
* பள்ளி மாணவர்கள்  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  
* கல்லுாரி மாணவர்கள் சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

சுமாரான பலன்கள்
* வியாபாரிகள் மறைமுகப் போட்டியாளர்களால் தொல்லைக்கு ஆளாவர். சூரியனால் பொருள் விரயம், நஷ்டம் உருவாகலாம். ஆனாலும் சுக்கிரனால் வருமானம் சீராக இருக்கும்.  
* மருத்துவர்கள் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர். வீண் அலைச்சல் அதிகரிக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன்கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைப்பது நல்லது.
* ஆசிரியர்கள் வழக்கத்தை விட அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும்.     
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்தவும். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
* தரகு,கமிஷன் தொழிலில் கூடுதல் கவனம் தேவை.
* அரசியல்வாதிகள் தொண்டர்கள் வகையில் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
* விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
* பள்ளி மாணவர்கள் மார்ச் 11க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
 
நல்ல நாள்: பிப்.13,18,19,20,21,22,26,27, மார்ச் 1,2,3,8,9,10,11
கவன நாள்: பிப்.14,15 மார்ச் 12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் தீபம்
* சனியன்று பெருமாள் கோயில் தரிசனம்
* பவுர்ணமியன்று அம்மனுக்கு அர்ச்சனை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
குரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்
 
temple
 புரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்
 
temple
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்
 
temple
திருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்
 
temple
சபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.