Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமாரியம்மன் கோவிலில் ... பராமரிப்பு பணிகளுக்காக பழநி ரோப் கார் நிறுத்தம் பராமரிப்பு பணிகளுக்காக பழநி ரோப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமங்கை ஆழ்வார் சிலை கண்டுபிடிப்பு?
எழுத்தின் அளவு:
திருமங்கை ஆழ்வார் சிலை கண்டுபிடிப்பு?

பதிவு செய்த நாள்

13 பிப்
2020
12:02

சென்னை: தஞ்சாவூரில் காணாமல் போன திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜா பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலை பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து கோவிலின் செயல் அலுவலர் ராஜா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். முதற்கட்ட வழக்கு விசாரணையில் காணாமல் போன சிலையின் ஆவண புகைப்படமும் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள அஸ்மோலியன் மியூசியத்தில் உள்ள திருமங்கை ஆழ்வாரின் சிலையும் 100 சதவீதம் ஒன்றுபோல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சிலை மீட்கப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar