Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாகன பராமரிப்பில் வழிகாட்டுகிறது ... அழகர்கோவில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்! அழகர்கோவில் சித்திரை திருவிழா இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு ரூ.20 டிக்கெட் ரூ.500க்கு விற்பனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2012
10:05

மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (மே 2) நடக்கிறது. இதற்காக நேற்று, 20 ரூபாய் டிக்கெட்டை, 500 ரூபாய்க்கு, கோயில் ஊழியர்கள் சிலர் விற்றதை எதிர்த்து, பக்தர்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும், 20 ரூபாய் கட்டணத்தில், பக்தர்கள் திருக்கல்யாணத்தைக் காண அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக கோயில் கவுன்டர்களில், 1,000 டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்படும். ஆனால் கவுன்டர்களில் விற்காமல், நேற்று கோயில் அலுவலகம் முன் விற்கப்பட்டது. காலை 6 மணி முதலே பக்தர்கள் வரிசையாக நின்றிருந்த நிலையில், சிலருக்கு மட்டும் விற்கப்பட்டு, "டிக்கெட் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அதிகாரிகளிடம் முறையிட அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால், கேட் மூடப்பட்டது. வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயல, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பக்தர்கள் கூறியதாவது : திருக்கல்யாணத்தைக் காண, இலவச பாஸ் கிடைக்கப் பெறாதவர்களுக்கு 20 ரூபாய் கட்டணத்தில் காண டிக்கெட் விற்கப்படுகிறது. நேற்று சிலருக்கு மட்டும் விற்ற கோயில் ஊழியர்கள், மீதியுள்ள 20 ரூபாய் டிக்கெட்டை, 500 ரூபாய்க்கு விற்றனர். இது அதிகாரிகளுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ""டிக்கெட் கவுன்டர்களில் விற்கும்போது, சிலர் மொத்தமாக வாங்கி, வெளியில் கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவே, நேற்று அலுவலகம் முன் விற்கப்பட்டது. கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள் குறித்து விசாரிக்கப்படும், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar