Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை திருப்பதி கோவிலில் லட்சுமி ... மகா சிவராத்திரி: குலதெய்வத்தை வழிபட மாட்டு வண்டியில் புறப்பாடு மகா சிவராத்திரி: குலதெய்வத்தை வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி முருகன் கோவிலில் மகா சிவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழநி முருகன் கோவிலில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
11:02

சென்னை: வடபழநி முருகன் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என, ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என, புராணங்கள் கூறுகின்றன.மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளையே, மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ராத்திரி என்ற சொல்லுக்கு, அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள்.உயிர்கள் செயலற்று, ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.வடபழநி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இன்று மாலை, 4:30 மணிக்கு மகா பிரதோஷ காலத்திலிருந்து, அன்று இரவு முழுவதும், நான்கு காலங்களிலும் சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.முதல் காலம், இரவு, 8:30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு, 11:00 மணிக்கும், மூன்றாம் காலம் அதிகாலை, 1:00 மணிக்கும், நான்காம் காலம் அதிகாலை, 3:00 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்.

ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதைத் தொடர்ந்து பஜனையும் நடைபெறுகிறது. மேலும், இரவு, 8:30 மணிக்கு புவனேஸ்வரி, சீனிவாசனின் சிவ மகிமை வேத கோஷம், வீணை பாராயணம் நடக்கிறது.இரவு, 11:00 மணிக்கு வீரமணி ராஜுவின் மகன் அபிஷேக் ராஜுவின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 1:00 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் பஜன்ஸ் நடக்கிறது. முதல் கால பூஜை துவக்கத்தில் இருந்து அதிகாலை, 6:00 மணி வரை, ஒவ்வொரு மணி நேரமும் விதவிதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் மற்றும் அறநிலையத்துறை துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar