Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி லட்சார்ச்சனை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்துவாக லிங்க தீட்சை பெற்ற முஸ்லிம் லிங்காயத்து மடாதிபதியாக பட்டாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
01:02

கதக் கர்நாடக மாநிலம் கதக்கில், முஸ்லிம் இளைஞர் ஒருவர், ஹிந்துவாக லிங்க தீட்சை பெற்றுள்ளார். இதையடுத்து, பிப். 26 ல், கோருனேஸ்வரா லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாக, அவருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தின் அசூடி கிராமத்தைச் சேர்ந்தவர் திவானி ஷெரீப், 32. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இவருக்கு, திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளன. இவரது தந்தையும், தாயும் கஜுரி மடத்தின் முருகராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகளின் பக்தர்கள்.அவர்களுடன், திவானி ஷெரீப்புமும், அடிக்கடி மடத்திற்கு சென்று வருவார். இதனால் அவருக்கு ஹிந்து மதத்தின் மீதும், லிங்காயத்து சமூகத்தின் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஹிந்து மதத்தில் இணைய முடிவு செய்தார்.இதற்கு அவரது குடும்பத்தினரும் ஒப்பு கொள்ளவே, தற்போது முருக ராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகள், ஷெரிப்புக்கு லிங்க தீட்சை வழங்கி உள்ளார். மேலும் அசூடி கிராமத்தின், கோருனேஸ்வரா சாந்திதாமா ஆசிரமத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, அசூடி கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலத்தில், கோருனேஸ்வரா மடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மடத்திற்கு ஷெரீப்பை மடாதிபதியாக்க, முருகராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகள் முடிவு செய்துள்ளார். அதன்படி, பிப். 26 ம் தேதி மடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.இது குறித்து, முருகராஜேந்திரா கோருனேஸ்வரா சிவயோகி சுவாமிகள், கூறுகையில், 12 வது நுாற்றாண்டில் பசவண்ணர் காட்டிய வழியை பின்பற்றுபவர்கள் நாங்கள். அவரது கொள்கை படி, லிங்காயத்தில் இணைய அனைத்து மதத்தினருக்கும் அனுமதியுண்டு. ஷெரீப், மடாதிபதியாவது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar