Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹிந்துவாக லிங்க தீட்சை பெற்ற ... ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம் ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி லட்சார்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
10:02

தி.மலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.

Default Image
Next News

பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதி பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும் காட்சி கொடுத்த நாள் மஹா சிவராத்திரியாகும். இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. கோவில் வளாகம் திராட்சை தோரணத்தாலும், இரண்டாம் பிரகாரம் வண்ண மின் விளக்குகளாலும் ஜொலித்தது. லிங்கோத்பவர் சன்னதி, வண்ணமலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இரவு, 7:30 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு அபிஷேகம் நடந்தது. கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தி லட்சார்ச்சனை டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், அர்ச்சனை செய்ய அரை கிலோ உதிரி பூக்கள் பக்தர்களிடம் வழங்கி, அதை சுவாமி கருவறையில் இருக்கும் சிவாச்சாரியார்களிடம் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ள அனுமதிப்பர். ஆனால், கோவில் நிர்வாகம் குறைந்த அளவு பூக்களை கொள்முதல் செய்ததால், காலை, 9:00 மணிக்கு மேல் லட்சார்ச்சனை டிக்கெட் கொண்டு வந்த பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யாமல், சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar