Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் சுவாமி ... கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோட்டை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை கோயில்களில் சிவராத்திரி: விடிய, விடிய நாட்டியாஞ்சலி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை கோயில்களில் சிவராத்திரி: விடிய, விடிய நாட்டியாஞ்சலி

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
12:02

தஞ்சாவூர் :மகா சிவராத்திரியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில்களில் நாட்டியாஞ்சலி விழா நடந்தது.மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களில் நான்கு கால சிறப்பு பூஜைகள், மாலை துவங்கி நள்ளிரவு வரை நடக்கும். பக்தர்கள் விடிய, விடிய கண் விழித்து தரிசனம் செய்வது வழக்கம். தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டஷேன் சார்பில், மாலையில், நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விடிய, விடிய நடனமாடினர். 27ம் தேதி வரை நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

குபேர நாட்டியாஞ்சலி: தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீசுவரர் கோயிலில், குபேரர் நாட்டியாஞ்சலி விழா, நேற்று முன்தினம் மாலை துவங்கியது. தொடர்ந்து இரு நாட்கள் நடந்த விழாவில் தஞ்சாவூர், கும்பகோணம், ஓசூர், அரியலுார், சென்னை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல, திருவையாறு ஐயாறப்பர் கோயில், பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயில்களில், நேற்று துவங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள், மூன்று நாட்களுக்கு நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar