Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூரில் மார்ச் 9ல் தெப்ப ... வேலங்குடி கருப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2020
10:02

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாசி தெப்போற்சவம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

முதல் நாள் தெப்பம், நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, அன்று மதியம், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின், மாலை, 6:30 மணிக்கு, ஹிருதாபநாசினி குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்திற்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் எழுந்தருளினார். மூன்று முறை பெருமாள் தெப்பத்தில் வலம் வந்தார். நேற்று, இரண்டாவது நாளாக தெப்போற்சவம் நடைபெற்றது. சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள், குளக்கரையை சுற்றி நின்று பெருமாளை வழிபட்டனர். இன்று, மூன்றாவது நாளாக தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. முன்னதாக, கோவில் வளாகத்தில் கண்ணாடி அறையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் மதியம், 3:30 மணிக்கு நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar