புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2020 12:02
புதுச்சேரி: புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று வல்லாளன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 43ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்றிரவு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா சென்று, வல்லாளன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய நிகழ்வாக, இன்று காலை 6:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு தேர் புறப்பாடு நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு நரிமேடு இடுகாட்டில் மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி காலை 7:30 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரையில் தீர்த்தவாரி, 8ம் தேதி தெப்பல் உற்சவம், 9ம் தேதி மாசிமக கடல் தீர்த்தவாரி நடக்கிறது.