Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேர் ... திருநாங்கூர் வண்புருஷோத்தம பெருமாள் தேர் வெள்ளோட்டம் திருநாங்கூர் வண்புருஷோத்தம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

05 மார்
2020
11:03

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழாவின் தேரோட்டம், இன்று, கோலாகலமாக நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரங்களில் ஒன்றாக, திருப்போரூர் விளங்குகிறது.இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவில் உள்ளது. கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாகவும், மும்மூர்த்தி அம்சமாகவும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வீதியுலாமாதந்தோறும், பரணி கிருத்திகை, சஷ்டி, விசாகம் உள்ளிட்ட விசஷே நாட்களில், கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகா பிரம்மோற்சவ பெருவிழா, 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை மற்றும் இரவில், கிளி, வெள்ளி அன்னம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில், சுவாமி எழுந்தருள்கிறார்.நேற்று காலை, கந்தசுவாமி, தொட்டி உற்சவம் மற்றும் யானை வாகனம் உற்சவ அலங்காரத்தில், மாடவீதியில் உலா வந்தார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம், இன்று, கோலாகலமாக நடைபெறுகிறது. காலை, 6:00 மணிக்கு, உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.அலங்காரம்தொடர்ந்து, விசஷே அலங்காரத்தில் எழும் சுவாமி, பக்தர்களின், அரோகரா அரோகரா... என்ற கோஷத்துடன் தேரடிக்கு புறப்படுகிறார். பின், சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருள உள்ளார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்து செல்வர்.ஏற்பாடுகாலை, 9:00 மணிக்கு மேல் புறப்படும் தேர், கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாடவீதிகள் வழியாக, மதியம், 1:00 மணிக்கு, தேரடிக்கு இழுத்து வரப்படும்.மாலை, 6:00 மணிக்கு, பன்னீர், மரிக்கொழுந்துகளை தெளித்து, தவன உற்சவத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விழாவை ஒட்டி, திருப்போரூர் பகுதிகளில் குடிநீர், மோர், அன்னதானம், பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.விழா ஏற்பாடுகளை, கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம், இன்று நடைபெறுவதால், உள்ளூர் விடுமுறை விடப்படுமா என, பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்துஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar