Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா ... நன்னாடு கிராமத்தில் தேர்த் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர், தியாகராஜர் திருநடனம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர், தியாகராஜர் திருநடனம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 மார்
2020
10:03

திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி கோவில், மாசி பிரம்மோற்சவம், பந்தம் பறி உற்சவம் மற்றும் 18 திருநடனத்துடன் நிறைவுற்றது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம், வெகு விமரிசையாக நடக்கும். இம் முறை, பிப்., 29ல், கொடியேற்றத்துடன், மாசி பிரம்மோற்சவம் துவங்கியது. திருவிழா நாட்களில், உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, யானை, குதிரை, சிம்மம், பூதம், ரிஷபம், அஸ்தமானகிரி, அதிகார நந்தி, இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு போன்ற வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார். திருத்தேரோட்டம், 6ம் தேதியும், 8ம் தேதி, கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், 63 நாயன்மார்கள் மாடவீதி உலா, மகிழடி சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தேறின.மாசி பிரம்மோற்சவம் நிறைவாக, நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம் மற்றும், 18 திருநடனம் வெகு விமரிசையாக நடந்தது.தியாகராஜ சுவாமி, விசஷே மலர் அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளினார்.

சண்டிகேஸ்வரர், வடிவுடையம்மன் முன் அணிவகுக்க, அதிகாலை, 4:00 மணிக்கு, கயிலாய வாத்தியங்கள் முழங்க, மாட வீதி உலா புறப்பாடானது.வீதி உலா முடிந்து, சன்னிதி தெருவில், திருவிழா வரவு - செலவு கணக்கு வாசிப்பு நிகழ்வு நடந்தது. கோவில் வளாகத்தின், வசந்த தொட்டியை வந்தடைந்த தியாகராஜர், வடிவுடையம்மன் எதிர்சேவை புரிய, ஒன்பது திருநடனம் புரிந்தார். தொடர்ந்து, வடிவுடையம்மன் சன்னிதியில் இருந்து தெற்கு நோக்கி எழுந்தருள, வடக்கு திசை நோக்கி, தியாகராஜர் ஒன்பது திருநடனம் புரிந்தார்.இந்த, 18 திருநடனத்தின் போது, சாம்பிராணி துாபமிட்டு, பல வண்ண மலர்கள் துாவப்பட்டன. அப்போது, கூடியிருந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஒற்றியூரா தியாகேசா என, விண்ணதிர முழங்கினர். இந்நிகழ்வுடன், தியாகராஜர் கோவில், மாசி பிரம்மோற்சவம் நிறைவுற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar