Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருவிகுளம் கோயிலில் தேரோட்டம் ... தூத்துக்குடி வெங்கடாஜலபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி கோயில்களில்பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
11:05

தென்காசி :தென்காசி பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நந்தி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தென்காசி குலசேகரநாதர் கோயிலில் மாலையில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சிதம்பரேஸ்வரர் கோயில், மேலசங்கரன் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், இலஞ்சி குமாரர் கோயில், செங்கோட்டை சிவன் கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar