Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வட பழநி முருகன் கோயிலில் முழு ... வெறிச்சோடிய நவபாஷாணம் வெறிச்சோடிய நவபாஷாணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய முறையில் காமன் கூத்து விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாரம்பரிய முறையில் காமன் கூத்து விழா

பதிவு செய்த நாள்

15 மார்
2020
05:03

கூடலூர்: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில், காமன் கூத்து விழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஆமைக்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் பங்குனி மாதத்தில், தன் தவத்தை கலைக்கும், மன்மதனை சிவன், நெற்றி கண்திறந்து எரிக்கும் காமன் கூத்து விழா பாரம்பரியம் மாறாமல், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மக்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஆமைக்குளம் பகுதியில் நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த 27ல் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு ரதி - மன்மதன் வேசம் அணிந்து வீடு வீடாக சென்று ஆடும் நிகழ்வு நடந்தது. மன்மதனை சிவன், நெற்றி கண்திறந்து எரிக்கும் விழா நேற்று முன்தினம், மாலை 7:00 மணிக்கு ஆசிர்வாசம் பெறும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

இரவு 11:30 மணிக்கு வில்பாலித்தல், பட்டத்து தேர் கன்திறந்து ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, ரதி - மன்மதன் பரிசம் கட்டுதல், திருமண நிகழ்ச்சிகள்; மொய் விருந்துபசாரம் நடந்தது. நள்ளிரவு 1:30 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சி; தொடர்ந்து, தூதுவன் வருகை தட்சன் யாகம்; அதற்கு விநாயகர் புறப்படுதல்; வீரபத்திரன் வருகை; தட்சன் வதைப்படலம்;அதிகாலை 5.15 மணிக்கு எமன் பாசக்கயிற்றுடன் காளையன் சிங்கிலி வருகை நிகழ்ச்சிகள் நடந்தது. அதிகாலை 5:30மணிக்கு சிவபெருமான்,நெற்றிக் கண் மூடும் மன்மதனை எரிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியம் மாறாமல் நடந்தது. இந்நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் விடிய விடிய கண்விழித்து ரசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar