Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செவ்வாய் தோஷம் போக்கும் முருகன் கோயிலில் நடை சாத்தியிருந்தாலும் வழிபடலாமா? கோயிலில் நடை சாத்தியிருந்தாலும் ...
முதல் பக்கம் » துளிகள்
பிரதோஷத்தில் இருக்கு இத்தனை வகை!!
எழுத்தின் அளவு:
பிரதோஷத்தில் இருக்கு இத்தனை வகை!!

பதிவு செய்த நாள்

25 மார்
2020
04:03

பிரதோஷத்தின் பெயர்களும் அதற்கான விளக்கமும் இடம் பெற்றுள்ளன.

நித்ய பிரதோஷம்: தினமும் மாலையில் சூரியன் மறைவதற்கு முந்திய 90 நிமிடம் (மாலை 4:30 – 6:00 மணி) நித்ய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் சிவனை தரிசிப்பது நல்லது.  ஐந்து வருடம் தரிசிப்பவர்கள் சிவனருளால் பிறப்பற்ற நிலையை அடைவர்.  

பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறையில் 13வது திதியான திரயோதசி திதியன்று வருவது.

மாதப் பிரதோஷம் : பவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறையில் 13வது திதியான திரயோதசி திதியன்று வருவது

திவ்யப் பிரதோஷம் :துவாதசியுடன் திரயோதசி சேர்ந்து வருவது அல்லது திரயோதசியுடன் சதுர்த்தசி சேர்ந்து வருவது திவ்யப் பிரதோஷம். இந்நாளில் சிவனை தரிசித்தால் முன் ஜென்ம பாவம் தீரும்.

தீபப் பிரதோஷம் : பிரதோஷ நாளில் விளக்கு தானம் செய்வது. இந்நாளில் சிவன் கோயிலில் தீபங்களை ஏற்றினால் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும்.

சப்தரிஷி பிரதோஷம் :ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே சப்தரிஷி மண்டலம் ஆகும். பிரதோஷ வழிபாடு முடித்தபின் சப்தரிஷிகளை மனதில் நினைத்து வழிபட்டால் திருவருள், குருவருள் சேரும்.    

மகா பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருவது மகா பிரதோஷம்.  சிவன் விஷம் அருந்திய நாளான இதில் சுயம்பு லிங்கத்தை வழிபடுவது சிறப்பு.  

உத்தம மகா பிரதோஷம் :சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறையின் போது சனிக்கிழமையும், திரயோதசி திதியும் இணைவது உத்தம மகா பிரதோஷமாகும்.  

ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒருமுறை மட்டுமே மகா பிரதோஷம் வருவது   

அர்த்தநாரி பிரதோஷம் : வருடத்தில் இரு முறை மகாபிரதோஷம் வருவது. இந்நாளில் சிவனை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும்.  

திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வருவது. இதை தரிசித்தால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும்.

பிரம்ம பிரதோஷம் : வருடத்தில் நான்கு முறை மகாபிரதோஷம் வருவது.  பிரம்மா தனக்கு ஏற்பட்ட சாபம் தீர திருவண்ணாமலையில் சிவதரிசனம் செய்ததால் இப்பெயர் வந்தது. முன்ஜென்மப் பாவத்தை இது போக்கும்.

அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வருவது. தாருகாவனத்தில் இருந்த ரிஷிகள் ஆணவத்தால் சிவனை எதிர்த்தனர். அதை அடக்க பிட்சாடனராகத் தோன்றி தக்க பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள் அட்சரப் பிரதோஷ விரதமிருந்து விமோசனம் பெற்றனர்.


கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது. சூரனை வதம் செய்வதற்கு முன் முருகப்பெருமான் இந்நாளில் வழிபட்டதால் இப்பெயர் வந்தது.   

சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வருவது. வசுதேவர், தேவகி தம்பதிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எட்டாவது குழந்தையான கண்ணன் கருவில் இருக்கும் போது தேவகி இந்த விரதம் மேற்கொண்டாள். இதைக் கடைபிடித்தால் அழகான, அறிவு மிக்க குழந்தைகள் பிறப்பர்.   

அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் வருவது இதில் தரிசித்தால் அஷ்டதிக்கு பாலகர்களின் அருளால் குறையாத செல்வம், புகழ் வரமாகக் கிடைக்கும்.   

நவகிரக பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வருவது.  அரிதான இதை அனுஷ்டித்தால் சகல சவுபாக்கியம் கிடைக்கும்.  

துத்த பிரதோஷம் : ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவது. இதை தரிசித்தவருக்கு  சிவனின் திருவடியை அடையும் பேறு கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar