Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொரோனாவால் கோவில்கள் மூடல்; யுகாதி ... ஆத்தூர், பெரியமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா வைரஸ் எதிரொலி பொது சுகாதாரத்தில் ஆர்வம் காட்டும் மக்கள்,
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2020
03:03

 திருக்கனுார் : திருக்கனுார் பகுதியில் கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு, கிராம மக்கள், சுய உதவிக்குழுவினர் இணைந்து கிராமத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க, நமது முன்னோர்கள் காலரா, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய்களை விரட்ட மேற்கொண்ட இயற்கை கிருமி நாசினிகளை, தற்போது மீண்டும் கிராம மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, திருக்கனுார் கிராமத்தில், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் இணைந்து வீதிகள் மற்றும் வீட்டு வாசல்களில் மாட்டு சாணம், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கரைசல்களை தெளித்து சுத்தம் செய்வதோடு, வீட்டு வாசல்களில் வேப்பிலை தோரணம் கட்டி வருகின்றனர்.இதேபோல், பல்வேறு கிராமங்களிலும், பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலை கரைசலை கொடுத்து வருகின்றனர்.மேலும், அரசு சார்பில் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்காததால், பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் கிருமி நாசினிகளை வாங்கி சாலைகளில் தெளித்து, சுத்தம் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar