Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கிராம கோவில் பூஜாரிகள் ஓய்வூதியம் ... மனக்கஷ்டங்கள் நீங்கி, ஆயுள் விருத்திக்கு இன்று சந்திர தரிசனம் செய்யுங்க! மனக்கஷ்டங்கள் நீங்கி, ஆயுள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இல்லாதவரை தேடி சென்று உணவு வழங்குங்கள்: காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2020
15:49

 பல்லடம்:  இல்லாதவர்களை தேடி சென்று உணவு வழங்குங்கள் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் அறிவுறுத்தினார். பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், அமாவாசை வழிபாடு நடந்தது. அதை முன்னிட்டு, மகா ம்ருத்தியுஞ்ஜய வேள்வியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு வேள்வியை நடத்தி வைத்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது: உணவே மருந்தாக கொண்டு நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். மனிதர்களுக்கு சுற்றுப்புறத் தூய்மையை காட்டிலும் உள் தூய்மை மிக முக்கியமானது. அதற்காக, நம் முன்னோர்கள் வழிகாட்டிய தூதுவளை, ஆடாதோடை, ஆவாரை, வேப்பிலை, திப்பிலி, மிளகு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்களை கொண்டு, கஷாயம் தயாரித்து அருந்துவது நல்லது. அதனால், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக, நாமும் பாடுபடவேண்டும். ஜீவாதாரமே பாதிக்கப்பட்ட பலர், உணவு உண்ணவும் வழியின்றி தவித்து வருகின்றனர். அது போன்றவர்களுக்கு, வசதி படைத்தவர்கள், உணவை தேடிச்சென்று வழங்க வேண்டும். ஒவ்வொரு நூற்றாண்டிலும், ஒவ்வொரு தீராத வியாதிகள் வந்து, மக்களை அச்சுறுத்தி வந்துள்ளன. அவ்வாறு, வாந்தி, பேதி வந்தபோது, கிராம மக்கள் மாகாளி தெய்வத்தையும், மாரி எனப்படும் அம்மை நோய் வரும்போது, மக்கள் மாரியம்மனையும், பிளேக் நோய் வரும்போது, பிளேக் மாரியம்மனையும் வழிபட்டனர். ஆனால், இன்று உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் நோய்க்காக, சக்தி வாய்ந்த கோவில்களும் மூடப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

இயற்கையின் சீற்றத்தின் போது, பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதுபோன்று, வைரஸ் நோய் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பும், தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சர்க்கரை, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதுபோன்று, உலக மக்களை அச்சுறுத்தி வரும், கொரோனா நோய் தாக்குதலில் இருந்தும், மக்கள் விடுபடுவார்கள். அனைவரும், இயற்கை சார்ந்த உணவுகளை உண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நூற்றாண்டுகள் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, பல்வேறு மூலிகைகள் கொண்ட கஷாய பொடியை, பக்தர்ளுக்கு வழங்கினார். சிறப்பு அலங்காரத்துடன், தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
நாடு முழுவதும் நாளை(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு விளக்கேற்றும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் ... மேலும்
 
temple
அகர்தாலா, திரிபுராவில் நடைபெற்றுவரும் வசந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று, ஒன்பது நாட்களாக ... மேலும்
 
temple
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களிலும் உடலைச் சுற்றிலும் இருக்கும் ஒருவகையான காந்த சக்தி அல்லது ... மேலும்
 
temple
மதுரை; மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை இந்தாண்டும் வழக்கம் போல் நடத்த இடையூறாக இருக்கும் ... மேலும்
 
temple
 வடமதுரை :வடமதுரை பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயில் தரிசனத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.