Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணன் கோவிலில் சுதர்சன ... ஈஷா யோகா மையத்தில் கொரோனா இல்லை ஈஷா யோகா மையத்தில் கொரோனா இல்லை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதின மடத்தில் மக்களுக்கு கபசுரக் குடிநீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதின மடத்தில் மக்களுக்கு கபசுரக் குடிநீர்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
02:04

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதின திருமடத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் வழங்கினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மருத்துவ சேவையில் அளப்பரிய பணி யாற்றி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்கள் விடுபட தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட 27 திருக்கோயில்களிலும் கடந்த மாதம் தொடங்கி சிறப்பு வழிபாடு கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழக முதல் வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 11 லட்சம் வழங்கினார். இந்நிலையில், தருமபுரம் ஆதின திருமடத்தில் கொரோனா வைரஸ்சை எதிர்கொள்ளும் வகையில், மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவா மிகள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை கொடுத்து அருளாசி வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கபசுர குடிநீரை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து தருமபுரம் மாரியம்மன் கோயில் தெரு, அச்சுதராயபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar