Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநவமி: வேப்பம் பூமாலை ... ஊரடங்கால் குறைந்த கங்கை மாசு ஊரடங்கால் குறைந்த கங்கை மாசு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை கோயிலில் ராமநவமி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை கோயிலில் ராமநவமி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
09:04

 திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில் உற்ஸவ மூர்த்திகளுக்கு நேற்று ஆஸ்தானம் நடந்தது.

திருமலையில் ஆண்டு தோறும் ராமர் ஜென்ம தினத்தன்று வழிபாடு நடத்தி வருகிறது தேவஸ்தானம்.அதன்படி நேற்று ராம நவமி உற்ஸவத்தை முன்னிட்டு காலை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ராமரை கோயிலில் உள்ள கல்யாண உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருள செய்து அவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.மாலை 6:௦௦ முதல் 7:௦௦ மணி வரை ஏழுமலையான் கோயில் தங்க வாயில் அருகில் சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ராமரை எழுந்தருள செய்து அவர்களுக்கு ஆஸ்தானம் நடத்தப்பட்டது.

6 மணி நேர ஓய்வுதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் ஏற்படுத்தப்பட்ட கால கட்டத்தில் காலை5:00 மணிக்கு சுப்ரபாத சேவை துவங்கிஇரவு 8:00 மணிக்கு ஏகாந்த சேவையுடன் தினசரி கைங்கரியங்கள் நிறைவு பெற்று வந்தன.அப்போது பெருமாளுக்கு ஓய்வு என்பது பூரணமாக இருந்தது. அதன்பின் பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியதும் அவர்களின் தரிசனத்திற்காக இரவு ஏகாந்த சேவை 10:00 மணிக்கு மாற்றப்பட்டது. அதன்பின் ஏழுமலையான் ஓய்வு நான்கு மணி நேரமாக குறைந்தது.திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கிய பின் நள்ளிரவு 12:00 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு 12:30 மணிக்கு கோவில் நடை சாற்றப்பட்டது.

மீண்டும் சுப்ரபாத சேவைக்காக அதிகாலை 2:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு வருகிறது.இதனால் ஏழுமலையான் ஓய்வு நேரம் வெறும் ஒன்றரை மணி நேரமாக குறைந்து விட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையானுக்கு வழக்கமான பூஜைகள் தவிர்த்து தினமும் ஆறு மணி நேரம் ஓய்வு கிடைத்து வருகிறது.ஏப்., 14ம் தேதி வரை ஏழுமலையானுக்கு இந்த ஓய்வு நிரந்தரமாக கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar