Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாடு முழுவதும் வீடுகளில் தீபம் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரம்: வாழ்வு வளம் பெற இதை படிங்க..
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரம்: வாழ்வு வளம் பெற இதை படிங்க..

பதிவு செய்த நாள்

06 ஏப்
2020
10:04

பங்குனி உத்திர நாளான இன்று இந்த வழிபாட்டை படித்தால் முருகனருளால் வாழ்வு வளம் பெறும்.

* குன்று தோறும் குடிகொண்ட முருகனே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.

* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! பழநி தண்டாயுதபாணியே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சன்னிதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.

* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.

* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர்வேலவனே! சிவசுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக்குமரனே! சுவாமிநாதனே! சரவணபவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றி தருவாயாக.

* வேதம் போற்றும் வித்தகனே! குகனே! வள்ளி மணவாளனே! பக்தர்கள் உள்ளத்தில் வாழ்பவனே! காங்கேயனே! கண்கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழ் நாயகனே! தமிழ்க்கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று, இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.

இந்த நாள் நல்ல நாள்:

சிறப்பு மிக்க உத்திர நன்னாளில் நடந்தவை

* இமவானின் மகள் பார்வதியை சிவன் மணந்த நாள்
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
* சக்கரவர்த்தி திருமகன் ராமர் சீதையை மணந்தார்
* பரதன், லட்சுமணன், சத்ருகனன் திருமணம்
* இடும்பன் மூலம் காவடி துாக்கும் பழக்கம் ஆரம்பம்
* திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை திருமணம்
* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்
* தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்தநாள்
* சிவனின் தவம் கலைக்க முயன்ற மன்மதனை எரித்தல்
* ரதியின் வேண்டுகோளால் மன்மதனை சிவன் உயிர்பித்தல்
* மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்தல்
* பஞ்ச பாண்டவர்களி்ல் ஒருவரான அர்ஜூனன் பிறந்தார்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar