Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பங்குனி உத்திரத்தில் தெய்வத்தின் திருமணங்கள்! பங்குனி உத்திரத்தில் தெய்வத்தின் ... முருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகமா கார்த்திகையா? முருகன் அவதரித்த நட்சத்திரம் ...
முதல் பக்கம் » துளிகள்
கொரோனாவில் இருந்து தப்பிக்க....
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
15:46

ஞானசம்பந்தரின் பாடலை பாடினால் கொரோனாவில் இருந்து தப்பலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை..

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம் தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்.

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்.

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.

மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண்தோள் உடையீர்
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்.

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்து உமை ஏத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்.

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்து உமை ஏத்துதும் நாமடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்.

நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திருநீலகண்டம்.

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்.

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே.

 
மேலும் துளிகள் »
temple
தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த பலி ... மேலும்
 
temple
நிறைவேறும். ஆனால் இரு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நினைக்கும் விஷயம் நம் சக்திக்கும், ... மேலும்
 
temple
நோய் தீர்க்க மருந்து இருப்பது போல ஜாதக ரீதியான தோஷத்திற்கும் பரிகாரம் உண்டு. எந்த கிரகத்தால் தோஷம் ... மேலும்
 
temple
* சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் – 18 அடி உயர ஆஞ்சநேயர்* துாத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் – ... மேலும்
 
temple
ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமர், தெற்கு திசை நோக்கி வந்தார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.