Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை வழிபாடுக்கு, ஆன்லைன் ... கோவில் அர்ச்சகர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல் கோவில் அர்ச்சகர்களுக்கு மளிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவிலிருந்து விடுபட ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொரோனாவிலிருந்து விடுபட ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
02:04

மயிலாடுதுறை: கொரோனா வைரஸிலிருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மை வேண்டியும் மயிலாடுதுறை அருகே ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மருத்தூர் கிராமத்தில் பிரிசிபெற்ற ஸ்ரீ ராம வரதாஹினி மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தைரியத்திற்கு அதிபதியான ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால் சனி உள்ளிட்ட கிரக தோஷங்கள் மற்றும் சத்ரு உபாதைகள் நீங்கி புத்திர பாக்கியம் நோயற்ற வாழ்வு உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் உலக நன்மை வேண்டியும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதில் கணபதி ஹோமம் தன்வந்திரி ஹோமம் மகா மிருத்தியுஞ்சய ஹோமம் மற்றும் அஸ்திர ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஹோமம் மற்றும் பூஜைகளை சமூக இடைவெளிவிட்டு சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர். இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar