Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கழுகு பார்வையில் வைதீஸ்வரன் கோவில் விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷபே பராத் நாளில் வீடுகளிலேயே தொழுகை: அமைச்சர் வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
03:04

திருப்பத்துார்: ‘கொரோனா தொற்றால், இந்த ஆண்டு, ஷபே பராத் நன்னாளில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட வேண்டும்’ என, அமைச்சர் நிலோபர் கபில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்த அவர்  விடுத்துள்ள அறிக்கை: கொரோனா தொற்றிலிருந்து தப்ப, மக்கள் வெளியே சுற்றாமல் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்நிலையில், நாளை (இன்று) இரவு  வரும் ஷபே பராத், இஸ்லாமியர்களுக்கு மிக முக்கிய நாளாகும். இந்த இரவு புனிதமான ஒன்றாகும். அன்றைய நாளில், ஆண்கள் மசூதிகளில் தொழுகையில் ஈடுபடுவதும், பெண்கள் வீட்டிலேயே படிப்பதும் வழக்கம். இன்று கொரோனா தொற்றால் உலகமே  பாதிப்பில் உள்ளது. இந்தியாவில் இதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. இதனால், தேவையின்றி வீட்டுக்கு வெளியே வர யாருக்கும் அனுமதி இல்லை. மேலும், நாட்டின் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களான கோவில், தேவாலயம், மசூதி ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனால், இஸ்லாமியர்கள் தங்களது ஐந்து வேளை தொழுகையை, வீட்டில் நிறைவேற்ற வேண்டுகிறேன். ஷபே பராத் தொழுகையை, மசூதிகளில் நிறைவேற்ற ஆசை இருப்பது இயல்புதான். எனினும், நம்மில் யாருக்கு கரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியாது.  பாதிப்பு ஏற்பட்டவர் மூலமாக, மற்றவர்களுக்கு எளிதாக பரவ வாய்ப்பு அதிகம். எனவே, ஷபே பராத் தொழுகையை வீட்டுக்குள்ளேயே நடத்த வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், அரசின் உத்தரவை பின்பற்றி, தொழுகையை வீட்டிலேயே நடத்தி அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். கபரஸ்தானில் கூடி, துவா செய்வதை தவிர்த்து, மாறாக, அதை வீட்டிலே செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar