Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவிலில் திருமணத்திற்கு ... காரியசித்தி விநாயகருக்கு ஆண்டு விழா சிறப்பு பூஜை காரியசித்தி விநாயகருக்கு ஆண்டு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர அரசாணை வெளியீடு
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர அரசாணை வெளியீடு

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
08:06

திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்களை அனுமதிக்கும் அரசாணையை, ஆந்திர அரசு நேற்று மதியம் வெளியிட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, மார்ச் 20 முதல், ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆயினும், கோவிலில் தினசரி கைங்கரியங்கள் தவறாமல் நடத்தப்பட்டன.இந்நிலையில், நான்காம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படும் முன், கோவில்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஆந்திர அரசு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, தரிசன வரிசைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

ஆனால், நான்காம் கட்ட பொது முடக்கத்தில், கோவில்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது, ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிடம், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு இணங்கி, ஆந்திர அரசு, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி அளித்து, நேற்று காலை அரசாணை வெளியிட்டது. அதில், ஒவ்வொரு பக்தர்களுக்கிடையிலும், 6 அடி துாரம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதனால், மூன்று மாதங்களுக்குப் பின், வரும், 8ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு, பக்தர்களுக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar