Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகப்பெருமான் அவ்வையாரிடம் கேட்ட ... கடலுக்குள் கிடந்த கந்தன் கடலுக்குள் கிடந்த கந்தன்
முதல் பக்கம் » துளிகள்
முருகனின் அருள்பெற பாடுங்க!
எழுத்தின் அளவு:
முருகனின் அருள்பெற பாடுங்க!

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
04:06

திருமுருகனின் அருள்பெற திருமுருகாற்றுப்படை வெண்பா பாடுங்கள்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!    
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்    
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை.

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,  
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக்   
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்!  

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி    
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்  
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்.

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;  
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே!

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில் அஞ்சல் என வேல் தோன்றும்; - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்    
முருகா! என்று ஓதுவார் முன்.

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்    
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்  
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்    
நம்பியே கைதொழுவேன் நான்.

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,    
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்   
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல  
இடம்காண்; இரங்காய் இனி!

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்  
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு - சுருங்காமல்,   
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்   
பூசையாக் கொண்டே புகல்.

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,    
தான் நினைத்த எல்லாம் தரும்.

 
மேலும் துளிகள் »
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா அரலே மகனஹள்ளி கிராமத்தில் உள்ளது, ஸ்ரீசப்த மாதேயாரா கோவில். ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற, பல்வேறு புராதன கோவில்கள் உள்ளன. அவை இன்றும் பக்தர்களை தன் ... மேலும்
 
temple news
கேரளாவில் உள்ள பகவதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோன்று, கர்நாடகாவின் மங்களூரிலும், இத்தகைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar