Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் ... சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
10:06

திருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு, 6,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், தலைவர், சுப்பாராவ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளாவன:வரும், 8 முதல் ஏழுமலையான் தரிசனம், திருமலையில் துவங்கப்பட உள்ளது.

8 மற்றும், 9ல், தேவஸ்தான ஊழியர்கள்; 10ல், திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.வவஜூன், 11 முதல், அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் துவங்கப்படும். தினமும், 6,000 பேர் மட்டுமே, தரிசனத்திற்கு அனுமதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை, 6:30 மணி முதல், மாலை, இரவு, 7:௦௦ மணி வரை, ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 500 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.முதல் ஒரு மணி நேரம் வி.ஐ.பி., தரிசனம்; அதற்கு பின் சர்வ தரிசனம். 3,000 பேருக்கு, ஆன்லைன் மூலமாகவும், அலிபிரியில் உள்ள டிக்கெட் கவுன்டர் மூலம், 3,௦௦௦ பேருக்கு, நேரடி தரிசன டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலிபிரி நடைபாதை மார்க்கத்தில் காலை, 5:௦௦ மணி முதல், இரவு, 7:௦௦ மணி வரை மட்டுமே, பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.வவஸ்ரீவாரிமெட்டு மார்க்கம் முற்றிலும் மூடப்படும். மலைப்பாதைகள், அதிகாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை திறந்திருக்கும். 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதிற்கு உட்பட்டோருக்கும் தரிசன அனுமதி இல்லை. வரும், 8 முதல், ஆன்லைன் முன்பதிவுகள் துவங்க உள்ளது.

தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில், தெர்மல் ஸ்கேனிங் செய்த பின், திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் மட்டுமின்றி, பக்தர்கள் வரும் வாகனங்கள், அவர்களின் உடமைகளும், கிருமிநாசினி செய்யப்படும்.பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல, இரண்டு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முககவசம் அணிந்து கைகளை, சானிடைசரால் சுத்தம் செய்த பின், பக்தர்கள், தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கு, முழு உடலும் மூடிய நிலையிலான, பி.பி.இ., ஆடை வழங்கப்படும். பிரசாதம் வழங்குவது குறித்து, பின் ஆலோசிக்கப்படும்.எனினும், அன்னதான கூடத்தில், சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்கப்படும். இதுபோல, மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar