Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: ஆடம்பர வசதி சிம்மம்: சிறப்பான மாதம் சிம்மம்: சிறப்பான மாதம்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம்: அபார ஆற்றல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம்: அபார ஆற்றல்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
09:06

இந்த மாதம் சுக்கிரன், சனி, கேது நன்மை தர காத்திருக்கின்றனர். புதன் ஜூன் 21 - ஜூலை 3 வரை நற்பலன் கொடுப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.  குருபகவான் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கிறார். இது மிக சிறப்பான நிலை. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து  6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. குருபகவான் உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். அவர் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. இதன் மூலம் எந்த இடையூறையும் முறியடிக்கலாம்.

 குடும்பத்தில் சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் உதவிகரமாக செயல்படுவர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரித்த வண்ணம் இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பெண்கள் குடும்ப வாழ்வில் குதுாகலமாக இருப்பர். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு.   சகோதரர்களால் மேன்மை கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். சுய தொழில் செய்யும் பெண்கள் அதிக லாபத்தை பெறுவர். பெண் பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். செவ்வாயால் ஏற்பட்ட பொருள் விரயம், பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் ஜூன் 17க்கு பிறகு குணம் அடையும். ஆனால் அதன் பிறகு பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புண்டு. உங்களின் பணியாளர்கள் நன்றி, விசுவாசத்துடன் செயல்படுவர்.
* வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜூன் 21க்கு பிறகு  வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு  ஜூன் 21 – ஜூலை 3 வரை சகஊழியர்கள் மிக ஆதரவுடன் செயல்படுவர்.
* ஐ.டி. துறையினர் வேலையில் திருப்தியுடன் ஈடுபடுவர். யாருடைய உதவியையும் நாடாமல் திட்டமிட்ட செயலை நிறைவேற்றலாம்.
* மருத்துவர்கள் ஜூன் 21 –  ஜூலை 3 வரை சிறப்பான பலனைக் காணலாம் .முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வழக்குகளில் ஜூன் 21 –  ஜூலை 3 வரை சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூலை 7 க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
* அரசியல்வாதிகளுக்கு  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மக்கள் மத்தியில்  செல்வாக்கு அதிகரிக்கும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.  புதிய பதவி பெற வாய்ப்பு இருக்கிறது.
* கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புகழ் பாராட்டு எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
* விவசாயிகள் நல்ல வருமானத்தை காணலாம். நெல்,சோளம்,மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
* பால்பண்ணை தொழில் ஜூன் 21 –  ஜூலை 3 வரை கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
* பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு  அனுகூலமான காற்று வீசத் தொடங்கும்.

சுமாரான பலன்கள்
* அரசு பணியாளர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும்.
* தனியார் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். அதிக அலைச்சல் இருக்கும். சிலர் திடீர் இடமாற்றத்தை பெற வாய்ப்புண்டு. அது தற்போது உங்களுக்கு பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அதுவே சாதகமானதாக அமையும்.
* போலீஸ், ராணுவத்தினர் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* விவசாயிகள் வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,20,23,24,25,28,29 ஜூலை 4,5,6,7,8,15
கவன நாள்: ஜூலை 9,10  சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,2 நிறம்: வெள்ளை,சிவப்பு.

பரிகாரம்:
* வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு
* தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கு விரதம்
* தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar