Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவை சூரிய கிரஹணம் குறைக்குமா, ... ஹிந்துக்கள் திருந்துவது எப்போது? ஹிந்துக்கள் திருந்துவது எப்போது?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் பரிகாரம் செய்து உற்சவங்கள் நடக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவிலில் பரிகாரம் செய்து உற்சவங்கள் நடக்கும்!

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
11:06

 திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உற்சவங்கள், ஊரடங்கு விலக்கப்பட்ட பின், உரிய பரிகாரங்கள் செய்து, முறைப்படி நடத்தப்படும் என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தோஷம்திருச்சியில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், வயலுார் முருகன், உறையூர் வெக்காளியம்மன் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. ஊரடங்கால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.ஐந்து கட்டமாக ஊரடங்கு நீடித்திருப்பதால், கோவில்களை திறக்க வேண்டும்; கோவில் உற்சவங்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், முதல்வர், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோருக்கு, பக்தர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனு:கொரோனா தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு, வழக்கமான உற்சவங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கோவில் உற்சவங்களை நடத்தாமல் தவிர்க்கும் போது, தோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உலக மக்கள் நன்மைக்காக, ஸ்ரீரங்கம் கோவிலில், ஆகம விதிப்படி, தீர்த்தர்கள், ஸ்தலத்தார்கள் மற்றும் கைங்கரியர்களை கொண்டு உற்சவங்களை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்குஇது குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தவிர்க்க முடியாத காரணங்களால், கோவில் உற்சவங்களை நிறுத்தி வைக்கும்போது, ஆகம விதிப்படி, அதற்கான பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை.ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்ட பின், உரிய பரிகாரங்கள் செய்து, ஸ்ரீரங்கம் கோவிலில் உற்சவங்கள் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar