Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனத்தில் கோயில்களை திறக்க ... பலத்த பாதுகாப்புடன் நடந்த ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடந்த ஜகன்னாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2020
04:06

புதுடில்லி: கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு இந்திய முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணம் செல்ல மாட்டார்கள் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் வாழ்வின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித யாத்திரை அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். இந்நிலையில் ஹஜ் புனித யாத்திரை தொடர்பாக சவுதி அரேபிய அரசு நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. மெக்கா நகருக்கு மக்கள் புனித பயணம் மேற்கொண்டால் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. எனவே இந்தாண்டு வெளிநாடுகளில் இருந்து புனித பயணத்திற்கு வருவோருக்கு அனுமதி அளிக்கப்படாது. சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாமென அறிவித்திருந்தது. இது குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: இந்தாண்டு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளதை இந்தியா வரவேற்கிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் ஹஜ் புனித பயணத்திற்கு செல்ல மாட்டார்கள். ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்த 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து செய்ததற்கு கட்டணம் பிடித்தம் இல்லாமல் நேரடியாக தொகை திருப்பி செலுத்தப்படும்.

சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் முகமது சலேஹ் பின் தாஹர் பெண்டனுடன் தொலைபேசியில் பேசினேன். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து யாத்ரீகர்களை அனுப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுகொண்டார். மேலும் கடந்த 2019ல் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் சென்றனர். அதில் 50 சதவீதம் பெண் யாத்ரீகர்கள் எனவும், ஆண் துணை இல்லாமல் 3,040 பேர் சென்று வந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், பராமரிப்பின்றி இருக்கும் பாலாத்தம்மன் கோவில் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: நவராத்திரியையொட்டி வீடுகள், கோயில்கள், கல்வி நிறுவனங்களில் கொலு வைக்கப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar