Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்த ஆண்டு ஹஜ் பயணம் இல்லை: நக்வி விற்பனையின்றி சுவாமி கற்சிலைகள் தேக்கம் விற்பனையின்றி சுவாமி கற்சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பலத்த பாதுகாப்புடன் நடந்த ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை
எழுத்தின் அளவு:
பலத்த பாதுகாப்புடன் நடந்த ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2020
10:06

புரி; ஒடிசா மாநிலம் புரியில், ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது.

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன், சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.தொலைக்காட்சிஇந்த ஆண்டு, கொரோனா பரவல் காரண மாக, ரத யாத்திரைக்கு தடை கோரப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், ரத யாத்திரையை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, வழக்கமான அளவில் பக்தர்கள் இல்லாமல், நேற்று தொடங்கியது. ஜகன்னாதரின் ரதம், 45 அடி உயரத்தில், 16 பெரிய மர சக்கரங்களுடனும், அவரது மூத்த சகோதரர் பாலபத்ராவின் ரதம், 14 சக்கரங்களுடன், 44 அடி உயரத்திலும், அவர்களது சகோதரி சுபத்ராவின் ரதம், 12 சக்கரங்களுடன், 43 அடி உயரத்திலும் தயாராக நிற்க, தங்க துடைப்பம் வீசும் சடங்கு முடிந்ததும், ரத யாத்திரை தொடங்கியது.இந்த விழாவை, லட்சக்கணக்கான பக்தர்கள் தொலைக்காட்சியின் நேரலையில் கண்டு களித்தனர்.

ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி, எம்.வெங்கையா நாயுடு, பிரதமர், நரேந்திர மோடி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா ஆகியோர் ரத யாத்திரை விழா தொடர்பாக, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.போலீஸ் பாதுகாப்புஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை தொடர்ந்து, ரத யாத்திரையில் பிரச்னைகள் ஏற்படாத வகையில், புரியில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல், இன்று பிற்பகல், 2:00 மணி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது.நகருக்குள் வரும் அனைத்து வழிகளும், சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத்நகரில் உள்ள ஜமல்பூரில், 143 ஆண்டுகளாக நடைபெறும், ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரைக்கு, மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் யாத்திரை கோவில் வளாகத்திற்குள் நடத்தப் பட்டது. இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள ஜமல்பூரில், 143 ஆண்டுகளாக நடைபெறும், ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரைக்கு, மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் யாத்திரை கோவில் வளாகத்திற்குள் நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று, கோவிலில் ஜகன்னாதர், அவரது சகோததர் பாலபத்ரா, சகோதரி சுபத்ராதேவி ஆகியோரின் சிலைகள், வழக்கமான வழிபாடுகளுடன் ரதங்களில் ஏற்றப்பட்டு, யாத்திரை நடைபெற்றது. இதில், முதல்வர், விஜய் ரூபானி, அவரது மனைவி அஞ்சலி பென் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar