Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... சிதம்பரம் திருமஞ்சன தேரோட்டம் ரத்து: தீட்சிதர்கள் கண்ணீர் சிதம்பரம் திருமஞ்சன தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா தொற்று ஒழிய ஏழுமலையானிடம் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
கொரோனா தொற்று ஒழிய ஏழுமலையானிடம் பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
11:06

திருப்பதி : உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒழியவும், நாட்டின் பாதுகாப்பிற்காக ஏழுமலையானிடம் வேண்டுதல் நடத்தியதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார். ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு தன் குடும்பத்துடன் திருமலையை அடைந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.முதலில், அதிகாரிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்கிய பின் மலர்செண்டு அளித்தனர். இரவு திருமலையில் தங்கிய முதல்வர் குடும்பத்தினர் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்டு கோவிலை விட்டுவெளியில் வந்த அவர் நாதநீராஜன மண்டபத்தில் நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தில் குடும்ப சமேதமாக பங்கேற்றார்.

பின்பு அவர் கூறியதாவது, நாடு மிக முக்கியமான இரு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. முதலில் கட்டுக்கடங்காமல் பெருகி வரும் கொரோனா தொற்று. இரண்டாவது எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல்.இவைகளிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காத்தருள வேண்டும் என்று ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன்.சுந்தர காண்ட பாராய ணம் பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியபடுத்தும். அதனால், அதில் கலந்து கொண்டது மனதிற்கு நிறைவாக உள்ளது என்று கூறினார். பின்னர் அகண்டம் அருகில் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி சமர்பித்தார். ஜபாலி சென்று ஆஞ்சநேயரை குடும்பத்துடன் வழிபட்டார். பின்பு திருச்சானுார்சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து தாயாரின்பிரசாதங்களை பெற்றுக் கொண்டு அவர் மத்திய பிரதேசம் புறப்பட்டார். கொரோனாவிற்கான பொது முடக்கத்திற்கு பின் வெளி மாநிலத்திலிருந்து ஏழுமலையானை தரிசிக்க வந்த முதல் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar