Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3அடி இடைவெளி அவசியம்: 56 ஆண்டுக்கு ... மரக்காணத்தில் மகா விஷ்ணு சிலை கண்டெடுப்பு மரக்காணத்தில் மகா விஷ்ணு சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம்
எழுத்தின் அளவு:
வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
11:07

வாரணாசி : கொரோனா தொற்றுக்கு மத்தியில், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் ஆனி சிவனுக்குரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. வடமாநிலங்களில் சிவனுக்காக காவடி யாத்திரையை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இது போன்ற மத நடவடிக்கைகளை தடை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில், கோவில் பிரசாதத்தை நாட்டின் எந்தவித பகுதிக்கும் அஞ்சல்துறை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஊரடங்கு நேரங்களில் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்கு, கோவில் பிரசாதத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் ஆன்லைன் மூலமாகவும் விநியோகிக்கப்படுகிறது. லட்டு பிரசாதத்தை பெற பக்தர்கள் ஆர்வமாக உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இதே போல், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை மூலம் பக்தர்களுக்கு வீட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவில் பிரசாதத்தை பெற, எந்தவொரு தபால்நிலையத்தில் (அஞ்சல்) இருந்தும் ரூ.251 க்கு மின்ணனு பண ஆணையை (EMO) வாரணாசியின் கிழக்கு பிரிவு மூத்த கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். வாரணாசியில் சுவாமி தரிசனத்திற்கு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பிரசாத பார்சலில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஜோதிர்லிங்கம், மகாமிருதுஞ்சய மகா யந்திரம், சிவ சாலிசா, ருத்ராக் ஜெபமாலை, உலர்ந்த பழங்கள், சாம்பல் மற்றும் ஒரு பாக்கெட் இனிப்புகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,-  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவிலில், சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி முதல் சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பாங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சூரசம்ஹார லீலை ... மேலும்
 
temple news
அமராவதி; வெங்கடபாலத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளம் ஸ்ரீ கற்பக விநாயகர் -ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில் மாசி மாத திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar