Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தியால் சங்கடம் தீருமா? ... பாண்டியர் கால கல்வெட்டு மேல்மலையனுாரில் கண்டுபிடிப்பு பாண்டியர் கால கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை : ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலை : ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
12:07

மும்பை: மும்பையில் விநாயகர்சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என பிஹரன் மும்பை மாநகராட்சி( பிஎம்சி) அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மும்பையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்தாண்டு கட்டுப்பாடுகளோடு கொண்டாட பிஹரன் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:விநாயகர்சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் சிறியதும், பெரியதுமான சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணோத்ஸவ் மண்டலங்கள் உள்ளன. இவைகளில் இருந்து விநாயகர் சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பணியை மேற்கொண்டுள்ளது. இதற்கான பணி நேற்று முன்தினம் (10 தேதி ) முதல் துவங்கப்பட்டுள்ளது. வரும் ஆக., மாதம் 19 ம் தேதி வரையில் விண்ணபங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அமைக்கப்படும் சிலைகள் இந்தாண்டு 4 அடிக்கு மேல் இருக்க கூடாது.சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பந்தல்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தப்படுத்த வேண்டும். சிலையை வணங்க வருபவர்களுக்கு சானிடைசர்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சிலைகள் வைக்கப்படும் இடத்தின் அருகே தற்காலிகமாக பூக்கள் விற்பனை கடை அமைக்கப்படும். இந்தாண்டு தற்காலிக பூக்கள் கடைக்கு அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் கட்டுபாட்டு நிபந்தனைகளை மீறுவோர் மீது தொற்று நோயகள் சட்டம் 1897. தேசிய பேரிடர் தடுப்புச்சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar