Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ... சஷ்டி கவசம் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க முறையீடு சஷ்டி கவசம் குறித்து அவதுாறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்பிகை புகழ் பாடும் ஆடி பிறந்தது!
எழுத்தின் அளவு:
அம்பிகை புகழ் பாடும் ஆடி பிறந்தது!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
02:07

தட்சிணாயன புண்ணிய காலமான ஆடிமாதம் இன்று தொடங்கியது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால்  நற்பலன் உண்டாகும். ஆடி அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் (ஜூலை 21,28, ஆக.4,11) வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை17,24,31, ஆக.7,14)  அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும். பிள்ளை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் உண்டாகும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இது தவிர ஆடிக்கார்த்திகை (ஜூலை16, ஆக.12) மகாபிரதோஷம்(ஜூலை18, ஆக.1),ஆடி அமாவாசை(ஜூலை 20), ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு(ஆக.2), ஆடிப்பூரம், நாகசதுர்த்தி(ஜூலை 24), கருட பஞ்சமி(ஜூலை25), கருடஜெயந்தி(ஜூலை 28) வரலட்சுமி விரதம்(ஜூலை31) மகாசங்கட ஹரசதுர்த்தி( ஆக.7)  என மாதம் முழுவதும் கோயில்களில் வழிபாடு நடந்த வண்ணமிருக்கும். இத்தகு சிறப்பு மிக்க ஆடியை வரவேற்று வழிபடுவோம்.


நன்றி சொல்லும் நன்னாள்: சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறுதீப்பொறிகள் சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப்பெண்கள் ஆறு பேரிடம் ஒப்படைத்தார். அவர்களும் ஆறுமுகனை வளர்த்து ஆளாக்கினர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில், ஆடி கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை நினைத்து பக்தர்கள் விரதமிருப்பர். ஆடி கார்த்திகை நாளில் விரதமிருந்தால் முருகன் மனம் குளிர்ந்து அருள்புரிவார். இந்த ஆண்டு ஜூலை 16, ஆக.12ல் ஆடிக்கார்த்திகை வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar