பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
06:07
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை விதிப்பதோடு இழிவாக விமர்சித்தவர்களை கைது செய்ய நீலகிரி மாவட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மஞ்சுநாத், - இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர்: கருப்பர் கூட்டம் அமைப்பை சில அமைப்புகள் வழிநடத்துகின்றனர். அதனால், இது போன்ற இழிவான செயல்களை செய்து, வன்முறையை துாண்டுகின்றனர். கருப்பர் கூட்டம் பற்றி பல முறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையை கெடுக்கும் சமூக வலைத்தள பதிவுகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.சபிதா, மாநில மகளிரணி துணை தலைவர், பா.ஜ., நீலகிரி:தினமும் காலை, மாலை, கந்தசஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது மனம் அமைதி பெறுகிறது.
முருக கடவுளை இழிவாக பேசி, கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக பேசிய, கயவனுக்கும், கருப்பு கூட்டத்துக்கு, அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கயவர்களை விட கூடாது. நம் தேசம் நமக்கு நல்ல பண்பை கற்று தந்துள்ளது. அதனை பின்பற்ற வேண்டும். கட்டு கட்டு கதறிட கதறிட என்று தொடரும் சஷ்டி கவசத்தின் வார்த்தைகள், இனி அந்த கயவர்களின் எண்ணங்களுக்கு சரியான பதில் சொல்லும்.திருஞானசம்பந்தன்,- எல்க்ஹில் முருகன் கோவில் அர்ச்சகர்: தமிழ் கடவுளாக முருக பெருமான் உள்ளார். மக்கள் மனதை புண்படும் வகையில் இந்த ஆபாச விமர்ச்சனங்கள் அமைந்துள்ளன. பிற மதத்தினரை எக்காரணம் கொண்டும் இழிவுப்படுத்த கூடாது. இது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக உள்ளது. அனைவரும் கருப்பர் கூட்டத்தை வன்மையாக எதிர்த்து வருகின்றனர். இது போன்ற அவல நிலையான செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அமைப்பு மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மோகன் ராஜ்-, நீலகிரி பா.ஜ., மாவட்ட செயலாளர்: தமிழ் கடவுளான முருக பெருமான் குல தெய்வமாகும். ஞானம் இல்லாதவர்கள் தான் அடுத்த மதத்தினரை இழிவுப்படுத்தி பேசுவார்கள்.
இந்த, கருப்பர் கூட்டம் செய்த இழிவான செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ., கட்சியினரின் வீடுகளில் முருக பெருமான் படம் வைத்து, கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறோம்.சுரேஷ், மாவட்ட செயலாளர், ஆர்.எஸ்.எஸ்:கந்தசஷ்டி கவசம் என்பது இந்து சமய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளக்கூடிய அருமையான பாடல் இதை களங்கப்படுத்தும் வகையில், கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்படும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மோதல்களை துாண்டும் வகையில் செயல்படுபவர்களை, கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால் போதும், இது போன்ற கயவர்களை ஒழிக்க முடியும்.முபாரக், வியாபாரி, குன்னுார்:எந்த மதங்களையும், வழிபாடுகளையும் இழிவுபடுத்துவது மிகப்பெரிய தவறு. தற்போது, கருப்பர் கூட்டம், என்ற அமைப்பின் சார்பில், இதுபோன்று, இந்து வழிபாடுகளை கேவலப்படுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பியுள்ளது. சமூகத்தில் மதங்களையும், வழிபாடு முறைகளையும் புண்படுத்தி வெளியிட்ட இத்தகைய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், இந்து முன்னணி, மாவட்ட செயலாளர்,
குன்னுார்:கல்வியை போற்றும் சரஸ்வதி தெய்வத்தையும், தமிழ் கடவுள் முருகரையும் சமூக வலை தளத்தில் அவதுாறாக பதிவு வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்த செயலுக்கு துாண்டுதலாக இருந்து கொண்டு, ஓட்டுக்களுக்காக மட்டும் இந்துக்களை நாடும், அரசியல் கட்சியினருக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.அம்சா, சமூக ஆர்வலர், எருமாடு:மதம் என்பதை வைத்து, அவரவர் வழிபாடுகளை நடத்துகின்றனர். அவர்களின் நம்பிக்கையை களங்கப்படுத்தும் விதமாக இது போன்று பதிவிடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். அப்போது தான், மதபிரச்னைகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்.பாதுஷா, வியாபாரி, கூடலுார்:இந்து கடவுகள் குறித்த புராணத்தை, அந்த மக்கள் நம்பி வழிபடுகின்றனர். தேவையில்லாமல், இது போன்று விமர்சனம் செய்வது, அவர்கள் மனதை பாதித்துள்ளது. அவர்களின் கோபம் நியாயமானது. பெரும்பான்மையான இந்து மக்களின் மத நம்பிக்கையை களங்கப்படுத்துவகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், பாரபட்சம் காட்ட கூடாது.திருஞானசம்பந்தன்.