Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனம் என்னும் போர்க்களம் மகாலட்சுமி ‘10’
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகாலட்சுமி டிட் – பிட்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
11:08

* மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். இப்பிறவியில் செல்வ வளமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் தருபவள்.
* லட்சுமிக்கு விருப்பமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
* நெல்லிமரத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள்.  துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.
* ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனி தானம் செய்த பெண்ணுக்காக ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடி லட்சுமி பொன்னும் பொருளும் கிடைக்கச் செய்தார்.
* வில்வ மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமையில் வில்வ இலைகளைப் பறிக்கக் கூடாது.
* பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்தபின்னரே சுவாமி தரிசனம் ஆரம்பமாகும். .
* துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
* வாழை, மாவிலை, எலுமிச்சம்பழங்களில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் சுபநிகழ்ச்சிகளில் இவற்றை பயன்படுத்துகிறோம். * தலைமுடியின் முன் வகிட்டில் லட்சுமி இருப்பதால் மணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வர். * தீபாவளியன்று அதிகாலை வேளையில் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
* யானை, குதிரையின் முகத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாள்.
* வைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ‘ஸ்ரீஸ்துதி’ என்னும் ஸ்தோத்திரத்தில் மகாலட்சுமியை ‘மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள்’ என புகழ்கிறார்.
* மகாவிஷ்ணுவின் அருள் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
* கணப்பொழுதும் பிரியாமல் மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே சிறந்தது என்கிறார் நம்மாழ்வார் * திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியவள்  மகாலட்சுமி.
* மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கைகள் இருக்கும். ஆனால் தனியாக சன்னதியில் நான்கு கைகள் கொண்டிருப்பாள். முன்னிரு கைகள் அபயம், வரத நிலையிலும், பின் இரண்டு கைகளில் தாமரைப்பூவும் ஏந்தி இருப்பாள்.
* மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்காததால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு.
* லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவரும் செம்பொன் நிறம் கொண்டவர்கள்.
* மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை லட்சுமியின் வாகனமாக வழிபடுவது வழக்கம்.
* மகாலட்சுமியின் அருளைப் பெற உகந்த கிழமை வெள்ளி. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே இந்நாளில் சூரிய உதயமானதும் லட்சுமியை பூஜிப்பது சிறப்பு.
* ஸ்ரீசூக்தம், ஸ்ரீஸ்துதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் ஆகியவை லட்சுமியின் பெருமையை போற்றுகின்றன.
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் ஏற்படும்.
* தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.
* மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி மீ்ண்டும் சேர்ந்த தலம் ஸ்ரீவாஞ்சியம்.
* பிரம்மா புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை பூஜிக்கிறார்.
* மகாலட்சுமியை பூஜித்த இந்திரன் அஷ்ட ஐஸ்வர்யம், ஐராவம் என்னும் யானை, அமராவதி பட்டணத்தை பெற்றார்.
* பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி தங்கியிருக்கிறாள்.
* லட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.
* வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம்.
* மகாலட்சுமியின் கைகளில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வாமனபுராணம் கூறுகிறது.
* வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாக லட்சுமியாக மகாலட்சுமி இருக்கிறாள்.
* கோயில்களில் மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்பவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
* லட்சுமி மாதுளம்பழத்தில் இருந்து தோன்றியதால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும், ஜனகரின் மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ‘ஸ்ரீ’ என்றும் போற்றப்படுகிறாள்.
* பல்லவர் கால சிற்பங்களில் கஜலட்சுமியை காணலாம்.  கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.
* திருக்குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.
* குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
* மகாராஷ்டிராவில் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக விவசாயிகள் கருதுகிறார்கள்.
* ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக கருதுகின்றனர். தானியம் அளக்கும் ‘காரி’ என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து வழிபடுகின்றனர்.
* வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
* லட்சுமியை வழிபட்டால் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், புகழ் உண்டாகும்.
* கன்னிப்பெண்கள் வரலட்சுமி விரத பூஜை செய்தால் நல்ல மணவாழ்வு அமையும்.
* எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
* மகாலட்சுமிக்கு உகந்தது நெய் தீபம்.  சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
* லட்சுமியின் அம்சமான நீரும், உப்பும் வீட்டில் குறைவின்றி இருக்க வேண்டும்.  
* நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி செல்வத்தை வழங்குகிறாள்.
* மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
* அனைவருக்கும் நன்மை தருபவள் என்று மகாலட்சுமி குறித்து அதர்வண வேதம் சொல்கிறது.
* வரலட்சுமிபூஜையன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
* வரலட்சுமி பூஜையில் அருகம்புல்லை துாவி வழிபட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
* சந்தனத்தில் லட்சுமி செய்து பூஜை செய்யலாம். ஆனால் மறுநாள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
* வரலட்சுமி பூஜையன்று புனித நதிகளில் நீராடினால் ஓராண்டு லட்சுமியை பூஜித்த புண்ணியம் கிடைக்கும்.
* சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.
* மன்னர் விக்ரமாதித்தன் வரலட்சுமி அருளால் இழந்த நாட்டை மீண்டும் அடைந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar