Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 18ம் படி கருப்பண சாமிக்கு ... அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்காவில் சிறப்பு வழிபாடு அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்காவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி தயார்: மதியம் 12.40 மணிக்கு அடிக்கல்
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி தயார்: மதியம் 12.40 மணிக்கு அடிக்கல்

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
06:08

அயோத்தி: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், முக்கிய விருந்தாளியாக, அயோத்தி நிலம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, அன்சாரி பங்கேற்கிறார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.

விழாக்கோலம்: இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி மாவட்டம் முழுதும், விழாக்கோலம் பூண்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, பூமி பூஜைக்கான சடங்குகள், அயோத்தியில் நேற்று முன்தினம் துவங்கின. இதற்காக, வாரணாசியிலிருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை, 8:00 மணி முதல், அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள் துவங்குகின்றன. விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியிலிருந்து, இன்று காலை, 9:35 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, லக்னோவுக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், அயோத்தி செல்கிறார். முதலில், ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்கிறார். அடுத்து, 12:00 மணிக்கு, ராம ஜன்மபூமிக்கு செல்கிறார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மதியம், 2:00 மணியளவில், அயோத்தியிலிருந்து புறப்பட்டு, டில்லி திரும்புகிறார். இத்தகவலை, பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, 200 வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி நிலம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி, முக்கிய விருந்தாளியாக பங்கேற்கிறார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட, பலரும் விழாவில் பங்கேற்கின்றனர்.

அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழாவை பல்வேறு, டிவி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. விழாவை ஒட்டி, அயோத்தியில், இன்று, லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. அத்துடன் நாடு முழுதும், கோவில்கள் மற்றும் வீடுகளில், மக்கள் அகல் விளக்குகளை ஏற்றி, விழாவை தீபாவளி போல் கொண்டாட, விஸ்வ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொண்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை: அயோத்தியில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழா குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எளிமை, தைரியம் கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை, ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் மற்றும் சீதையின் செய்தி மற்றும் ஆசியால், கோவிலின் பூமி பூஜை விழா, தேசிய ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் கலாசாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது, என, கூறியுள்ளார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, கமல்நாத், போபாலில் நேற்று கூறியதாவது:அயோத்தியில், ராமர் கோவில் பூமி பூஜை விழா நடக்கும் தினம், வரலாற்று சிறப்பு மிக்கது. மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் சார்பில் திரட்டிய நன்கொடை மூலம், 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும். இதை முன்னிட்டு, என் வீட்டில், ஹனுமன் சாலிசா பாராயணம் செய்தோம். இவ்வாறு, கமல்நாத் கூறினார்.

அயோத்தியில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவை யொட்டி, அமெரிக்காவில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராவணன் கோவிலில் கொண்டாட்டம்: உத்தர பிரதேசத்தில், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில், ராவணனுக்கு தனி கோவில் உள்ளது. அடிக்கல் நாட்டு விழா குறித்து, ராவணன் கோவில் பூசாரி, மகந்த் ராமதாஸ் கூறியதாவது: ராவணன் இல்லாவிடில், ராமரின் பெருமையும், புகழும் யாருக்கும் தெரிந்திருக்காது. ராமரால் தான், ராவணனின் திறமையும், சிவபக்தியும் அனைவருக்கும் தெரிந்தது. அயோத்தியில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவை யொட்டி, ராவணன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

வாக்குறுதி நிறைவேற்றம்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்; ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவு நீக்கப்படும் என்பவை, பா.ஜ.,வின் பிரதான வாக்குறுதிகள். கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ம் தேதி, ஜம்மு - காஷ்மீருக்கு, 370வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இப்போது, இந்த வருடம், அதே நாளில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

தேதி குறித்தவருக்கு மிரட்டல்: கர்நாடக மாநிலம், பெலகாவியை சேர்ந்த, சமஸ்கிருத வல்லுனரும், ஜோதிடருமான விஜயேந்திர சர்மா தான், அடிக்கல் நாட்டு விழாவுக்கான தேதி மற்றும் நேரத்தை குறித்து கொடுத்துள்ளார். இந்நிலையில், போலீசில் விஜயேந்திர சர்மா கொடுத்துள்ள புகாரில், அடிக்கல் நாட்டு விழாவுக்காக, ஆக., 5 உட்பட, நான்கு தேதிகளை குறித்து கொடுத்தேன். இதற்காக, சிலர் என்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என, தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழியும்: அயோத்தி கோவில் அடிக்கல் நாட்டு விழா பற்றி, சிவசேனா பத்திரிகையான, சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதை விட, வேறு சிறப்பான நேரம் இருக்க முடியாது. நாட்டை பீடித்துள்ள கொரோனா வைரஸ், ராமரின் அருளால் முற்றிலும் ஒழிந்து விடும்.இவ்வாறு, சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

கோவில் படம் வெளியீடு: ராமர் கோவிலின் வடிவமைப்பு படம், நேற்று வெளியிடப்பட்டது. கோபுரங்கள், துாண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக, கோவில் கட்டப்பட உள்ளது. கோவில் கட்டுமானம் குறித்து, அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது: ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமென்ட் ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும். இதற்கு தேவையான கற்கள், அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை, கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும். அடிக்கல் நாட்டு விழாவுக்காக, கங்கை, யமுனை, காவிரி உட்பட, பல புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல், புனித தலங்களில் இருந்து மண்ணும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar