Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : ... தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாநகராட்சிகளில் சிறு கோவில்கள் திறக்க அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாநகராட்சிகளில் சிறு கோவில்கள் திறக்க அனுமதி

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
09:08

 சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று(ஆக.,10) முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

தமிழகம் முழுதும், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, அவ்வப்போது முதல்வர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார். கடந்த மாதம், ஊராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான, வழிபாட்டு தலங்களை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டது. இம்மாதம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம்,10 ஆயிரத்திற்கு குறைவான, வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு அனுமதி அளித்தது. எனினும், பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளிலும், சிறியவழிபாட்டு தலங்களை, இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க, அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள, நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக, ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள்; சிறிய மசூதிகள்; சிறியதர்காக்கள்; தேவாலயங்கள் ஆகியவற்றில், மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், இன்று முதல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சி பகுதியில், இதற்கான அனுமதியை, சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சி பகுதிகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம், அனுமதி பெற வேண்டும். இதே போல், தமிழகம் முழுதும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar