Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாநகராட்சிகளில் சிறு கோவில்கள் ... வேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் வேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
09:08

சென்னை: தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர். கோவை டாடாபாத் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் அமைப்பு சார்பில், கந்த சஷ்டி கவசம் பாடல் பாடினர். கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு, தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., மற்றும் பல ஹிந்து அமைப்புகள் சார்பில், போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடியோ வெளியிட்ட, கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள, கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாத யாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நேற்று மாலை, 6:01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும், வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து, பூஜை செய்ய வேண்டும் என, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்தது. கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வை, உலகிற்கு காட்டுவோம் என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அதன்படி, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், தங்கள் வீடுகளில், நேற்று மாலை வேல் பூஜை நடத்தினர். அதேபோல், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களும், வீடுகளில் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர். பல பகுதிகளில், பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, வீடுகளின் முன் வேல் பூஜை நடத்தினர். திருநெல்வேலி, செண்பகம்பிள்ளை தெருவில் வேல் பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலையில் மழை பெய்தது. இருப்பினும் வீடுகள் தோறும் குடைகளை பிடித்த படி பூஜை மேற்கொண்டனர். கந்தசஷ்டி கவச பாடல்கள் ஒலிக்க, மக்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சமூக வலைதளங்களில் டிரெண்டிங்: வேல் பூஜை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமானோர், வேலுடன் புகைப்படம் எடுத்தும், பூஜை செய்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், டுவிட்டரில் #vel_pooja என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar