Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் ... கிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ஸ்ரீகிருஷ்ணரின் அற்புதமான குணங்கள் கிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி
எழுத்தின் அளவு:
சபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
11:08

சபரிமலை: கடும் நிபந்தனைகளுடன் வரும் மண்டல, மகரவிளக்கு கால சீசனை நடத்த கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் வரும் நவ., பாதியில் துவங்கும் மண்டல,- மகர விளக்கு சீசன் சபரிமலையில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நேற்று திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் சபரிமலை சீசன் பற்றிய ஆலோசனை கூட்டம் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் வருவாய், போலீஸ், பொதுப்பணித்துறை, போக்குவரத்து, தேவசம்போர்டு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

சான்றிதழ் அவசியம்: இதில் மண்டல ,மகரவிளக்கு சீசனை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி கொரோனா பாதிப்பில்லை என்ற (கோவிட்19 நெகட்டீவ்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவார்கள். ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை திறக்கப் படும். இங்கு பக்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே பம்பை செல்ல அனுமதிக் கப்படுவர்.

அரசு கடைகள் திறப்பு: பக்தர்கள் எண்ணிக்கை குறையும் என்ற காரணம் காட்டி கடைகள் எடுக்க வியாபாரிகள் முன்வராத பட்சத்தில் அரசு மற்றும் கூட்டுறவு, அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாராட்டு: கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளை போல் சீசன் நடத்த முடியா விட்டாலும், கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு மண்டல, மகரவிளக்கு சீசனை நடத்த அரசு மற்றும் தேவசம்போர்டு எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது, என்று பந்தளம் மன்னர் பிரநிதி சசிகுமாரவர்மா கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar