Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... தட்டாஞ்சாவடி தொகுதியில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் கோவில், வீடுகளில் கந்த சஷ்டி பாராயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
01:08

பொள்ளாச்சி, உடுமலையில் கோவில்கள், வீடுகளில், கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.கந்த சஷ்டி குறித்து அவதுாறு பரப்பிய, கருப்பர் கூட்டத்திற்கு எதிராக, வீடுகள் தோறும், ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில், கந்த சஷ்டி பாராயணம் செய்ய, ஆன்மிக பெரியவர்கள், இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி, உடுமலையில், ஸ்ரீ முருகப்பெருமானை வணங்கி, வீடுகளில், பெண்கள் விளக்கேற்றி, ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். கந்தனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர். முத்தையா பிள்ளை லே-அவுட், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியம் கோவிலில், வேல் வைத்து,பெண்கள் விளக்கேற்றி, கந்த சஷ்டி பாராயணம் செய்தனர்.

அதே போல், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.பொள்ளாச்சிபொள்ளாச்சி பகுதியில், வேல் வழிபாட்டு குழுவினர், பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று வீடுகள் முன் வேல் வழிபாடு செய்து, கந்த சஷ்டி கவசத்தை பாடினர்.நேற்று மாலை, 6:00 மணிக்கு வீட்டின் வாசலில் சமூக இடைவெளியுடன் முருகப்பெருமானை வழிபாடு செய்ததுடன், வேல் படம் வரைந்தும், வேல் வைத்து பூஜை செய்தும் கந்த சஷ்டி கசவம் பாடினர்.பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொதுமக்கள் கந்த சஷ்டி கவசத்தை பாடினர்.

சூளேஸ்வரன்பட்டி செம்பா கவுண்டர் காலனியில் குழந்தைகள் முருகன் வேடமணிந்து வந்தனர். முருகப்பெருமான், வேலுக்கு பூஜை செய்து, கந்த சஷ்டி கவசத்தை ஆர்வமாக படித்து வழிபட்டனர்.பா.ஜ., சார்பில், சின்ன நெகமம் மாரியம்மன் கோவிலில் நடந்த வேல் பூஜைக்கு, கட்சியின் கிழக்கு ஒன்றிய தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். இந்து இயக்க நிர்வாகிகள், பெண்கள் பங்கேற்றனர்.கோபாலபுரத்தில் நடந்த வேல்பூஜையில், ஒன்றிய தலைவர் ரகுபதி, பிரசார அணி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். பா.ஜ., இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். - நிருபர் குழு -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar