Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் மனைகளின் வாடகை உயர்வு இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி: ஆன்லைனில் தரிசனம் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோயிலுக்காக இஸ்லாமியர் வடிவமைக்கும் 2,100கி மணி; 15கிமீ வரை ஒலி கேட்கும்
எழுத்தின் அளவு:
ராமர் கோயிலுக்காக இஸ்லாமியர் வடிவமைக்கும் 2,100கி மணி; 15கிமீ வரை ஒலி கேட்கும்

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
01:08

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயிலுக்காக தவு தயால் மற்றும் இஸ்லாமியரான இக்பால் மிஸ்த்ரி என்பவர்கள் 2,100 கிலோ எடையுள்ள மணியை வடிவமைத்துள்ளனர். இதன் ஒலி, 15 கி.மீ வரை கேட்கக்கூடியது எனக் கூறப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த தவு தயால், தனது குழுவினருடன் சேர்ந்து 30 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவத்தில் கோவில் மணிகளை செய்யும் தொழிலை செய்துவருகிறார். தவு தயாலின் நண்பரும், சக கலைஞருமான இக்பால் மிஸ்த்ரி தான், அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிறகு அதிகமாக பேசப்படுபவர். ஆம், இஸ்லாமியரான இவர், ராமர் கோயிலுக்காக 2.1 டன் (2100 கிலோ) எடையுள்ள மணியை வடிவமைத்துள்ளார். இந்த மணியின் ஓசை 15 கி.மீ தொலைவு வரை கேட்கும் என கூறப்படுகிறது.

தவு தயால், இக்பால் மிஸ்திரி இருவரும் இணைந்து இவ்வளவு எடைகொண்ட பெரிய மணியை தயார் செய்தது இதுவே முதன்முறையாகும். இது குறித்து 50 வயதான தவு தயால் கூறுகையில், ‛இவ்வளவு பெரிய அளவிலான ஒரு மணியில் நீங்கள் பணிபுரியும் போது, ​​சிரமத்தின் அளவும் பல மடங்கு அதிகரிக்கும். பல மாதங்கள் நீடிக்கும் இந்த செயல்பாட்டில் சிறு தவறு நிகழாமல் இருப்பது மிகவும் கடினம். இதை ராமர் கோயிலுக்காக உருவாக்குகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனாலும், தவறிழைக்க கூடாது என்ற பயமும் எங்கள் மனதில் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்பால் மிஸ்த்ரி கூறியதாவது: மணி செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், உருக்கிய உலோகத்தை ஊற்றுவதில் 5 விநாடி தாமதம் நிகழ்ந்தாலும் முழு வேலையும் வீணாக போய்விடும் அபாயம் இந்த வேலையில் இருக்கிறது. உருவாக்குவதில் எங்களுக்கு நம்பிக்கையிருந்தாலும், ஒரு விதமான பதற்றமும் இருந்தது. இப்போது இது சிறந்த முறையில் உருவாகியுள்ளது. இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்கக்கூடியது. இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar