Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலை தயாரிப்பு பணி ஜரூர் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வணங்க அனுமதி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
09:08

திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல், பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளன.

இது குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், என். வாசு கூறியதாவது: வரும், 17ம் தேதியன்று, மலையாள புத்தாண்டு பிறக்கிறது. அன்று, கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர்த்து, மற்ற கோவில்கள் அனைத்தும், பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மற்றும் முதியோர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். கடந்த ஐந்து மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டதால் வாரியத்திற்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கேரளாவில், திருவாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் உட்பட, ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்களை நிர்வகித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, கடந்த, ஐந்து மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டதால், தேவசம் போர்டு, அதன், 3,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமல், திணறி வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அளிப்போரை மட்டும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க, தேவசம் வாரியம் திட்டமிட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்ததால், கோவில் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. குருவாயூர் கோவிலில், தினமும், 5 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது. ரொக்கம் மட்டுமின்றி, தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களும் காணிக்கையாக கிடைக்கும். இக்கோவிலும் ஆன்லைன் சேவை மூலம், வருவாய் ஈட்ட முயன்றது. ஆனால், பக்தர்கள் ஆர்வம் காட்டவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar