Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா ... விஜயநகர பேரரசின் வீரநடுகல்: திருப்பூரில் கண்டெடுப்பு விஜயநகர பேரரசின் வீரநடுகல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க தடை

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
09:08

சென்னை: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பொது இடங்களில், விநாயகர் சிலைகள் அமைக்க, விழா கொண்டாட, ஊர்வலம் நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வரும், 22ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும், பொது இடங்களில், விநாயகர் சிலைகள் அமைக்க, சிலைகள் அமைத்து விழா கொண்டாட, தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது, நீர் நிலைகளில் கரைப்பது போன்ற நிகழ்ச்சிகளை, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை, அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். பண்டிகை கொண்டாட, தேவையான பொருட்களை வாங்க, கடைகளுக்கோ, சந்தை களுக்கோ செல்வோர், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். சிறிய கோவில்களில் பொது மக்கள் வழிபட, ஏற்கனவே அரசு அனுமதி அளித்து உள்ளது. அந்தக் கோவில்களில் வழிபாடு செய்யும் போது, அரசு அறிவுறுத்தி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, கோவில் நிர்வாகமும், பொது மக்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

வழிபாட்டு தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்வோர், கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கிடையில், பொது இடங்களில், விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய, தடை விதித்துள்ளதை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கோரிக்கை விடுத்து உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar