Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர், சூரியன் வணங்கிய உப்பூர் ... ஆடி கடைசி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை ஆடி கடைசி வெள்ளி அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுஞ்சாணத்தில் விபூதி தயாரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பசுஞ்சாணத்தில் விபூதி தயாரிப்பு

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
10:08

சிவகங்கை:சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் பசுஞ்சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரித்து கோயில்களுக்கு வழங்கி வருகிறார் விவசாயி சம்பத்.

இவர், வீட்டருகே உள்ள பண்ணையில் காங்கேயம், வெச்சூர், மலைநாடு கிடா (கேரளா), நாகூரி (ராஜஸ்தான்), தர்பார்க்கர், சாகிவால் (வட மாநிலம்), காங்கிராஜ், கிர் (குஜராத்) நாட்டு இனத்தை சேர்ந்த 36 பசுக்கள், 10 கன்றுகள், 2 காளை மாடுகள் என 45 உள்ளன. தினமும் மாடு ஒன்றுக்கு 10 கிலோ சாணம் சேகரித்து பதப்படுத்தி உருண்டையாக்கி காய வைக்கிறார். இப்பணியில் 20 ஊழியர்கள் உள்ளனர்.

முற்றிலும் ஆன்மிக முறையில் செங்கல், புற்று மண்ணால் தயாரித்த சூளைக்குள் சாண உருண்டையை வைத்து புகை மூட்டம் போடுவார். இவை பக்குவமாக எரிந்து விபூதியாகிறது. ஒரு முறை சூளையில் சாண உருண்டை எரித்தால் 25 முதல் 50 கிலோ வீதம் மாதம் 400 கிலோ விபூதி தயாரிக்கின்றனர். ராமேஸ்வரம், திருச்செந்துார், வடபழனி உட்பட பல்வேறு கோயில்களில் இவர் தயாரித்த விபூதி சுவாமிக்கு அபிேஷகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

விபூதி தயாரிப்பில் திருப்தி: சம்பத் கூறியதாவது: ஆன்மிக நாட்டத்தால் , சிவம் என்ற பெயரில் விபூதி தயாரிப்பில் ஈடுபட்டேன். செலவும், வருவாயும் சமம் தான். ஆனால், சுவாமிக்கு பூஜை பொருளாக பயன்படுகிறதே என்ற திருப்தி அடைகிறேன். பசுக்களுக்கு தீவனத்திற்காக 4 ஏக்கரில் கோ- 4 ரக பசுந்தீவனம் வளர்க்கிறேன். தற்போது விபூதி கிலோ ரூ.500, பஞ்சகாவ்யம் லிட்டர் ரூ.150 முதல் 250, பசுவின் கோமியம் லிட்டர் 30 முதல் 100 ரூபாய்க்கு விற்கிறேன். கடுமையாகவும், உண்மையாகவும் உழைத்தால் கால்நடைகளும், விவசாயமும் என்றைக்கும் விவசாயிகளை கைவிடாது, என்றார்.
இவரை பாராட்ட 73389 39369.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar