Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ ... நாளை மஹாளய பட்சம் துவக்கம்: வாழ்த்த நம் வாசலில் காத்திருக்கும் முன்னோர்கள்! நாளை மஹாளய பட்சம் துவக்கம்: வாழ்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் தேங்காய் பழம் கொண்டு வர அனுமதி இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்கள் தேங்காய் பழம் கொண்டு வர அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

01 செப்
2020
05:09

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தேங்காய், பழம், பூ மாலைகள் ஆகியவை கொண்டு வர, அனுமதியில்லை என," செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் தெரிவித்தார்.

கொரோனா பிரச்னையால், 5 மாதங்களுக்குப் பிறகு, காரமடை அரங்கநாதர் கோவில், பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் அடங்கிய, ஆலோசனைக் கூட்டம், செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் தலைமையில் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம், பூ மாலைகள் ஆகியவற்றை ஆகியவை கொண்டு வர அனுமதி இல்லை. யாரேனும் மாலைகளை கொண்டு வந்தால், அதை வாங்கி கோவில் வளாகத்தில் வைக்கவேண்டும். கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் ஒவ்வொருவரின் உடலில் உடலின் வெப்ப நிலையை, தெர்மல் ஸ்கேனர் வாயிலாக கண்டறிய வேண்டும். பிறகு கிருமி நாசினி மருந்து கையில் தெளித்து, கோவிலின் உள்ளே அனுப்ப வேண்டும்.

இயல்பு நிலை திரும்பும் வரை, திருவிழாக்கள், உற்சவங்கள், ஆகியவற்றில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கோவிலில் பஜனை குழு, பக்தி இசை குழுக்கள் பாடவும், தெப்பக்குளத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. சுவாமி சிலைகள், தூண்கள், சுவர்கள் ஆகியவற்றை பக்தர்கள் தொடக்கூடாது. பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். ஒரு பக்தருக்கு ஒரு பக்தர், ஆறடி சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். இவற்றை கண்காணிக்கும் படி, கோவில் ஊழியர்களுக்கு, செயல் அலுவலர் அறிவுரை வழங்கினார். முன்னதாக கோவிலுக்குள் வந்த அர்ச்சகர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் வாயிலாக, உடலின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதை அடுத்து வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை அறியப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar