Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் கோவில்களில் குவியும் ... வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகளுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தணும்: இந்து அமைப்புகள் அரசுக்கு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2020
01:09

 கோவை:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும், ஆவணப்படுத்த வேண்டும் என்று, இந்து அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. இது குறித்து, இந்து மக்கள் கட்சி( தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:அறநிலையத்துறையின் கீழ் தமிழகத்தில், சுமார் 38,000 கோவில்கள் உள்ளன. இவையனைத்தும் அன்றாட வருவாயை ஈட்டுவதோடு, ஏராளமான சொத்துக்களை உள்ளடக்கியது.ஒவ்வொரு மாவட்டத்திலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஏராளமாய் உள்ளன. அவை குத்தகைதாரர்கள் வசம் உள்ளன.குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவற்றிலிருந்து வருவாய் கோவிலுக்கு ஈட்டப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அவ்வருவாய், குறைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களில் பலர், வாடகைக்கு வர்த்தகம் செய்கின்றனர். சிலர் குடியிருக்கின்றனர். அதிலிருந்து நியாயமான வருவாய் கோவிலுக்கு வருவதில்லை. இன்னும் பல கோவில்களில், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமாக ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் அரசியல் பிரமுகர்கள் சிலர், கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதை அப்புறப்படுத்த, அறநிலையத்துறை பெரிய முயற்சிகளை மேற்கொள்ளாதது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான நிலங்களையும், கட்டடங்களையும் ஆவணப்படுத்தி பட்டியலிட வேண்டும். சுவாமி பெயரில் பட்டா இருந்தால் அதை மாற்றவோ, ஏமாற்றவோ முடியாது.அரசு கட்டடங்கள், அரசு தானியக்கிடங்குகள் பெரும்பாலானவை, கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிலங்களை மீட்டு, குத்தகை பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு கொடுத்து, முறையாக வரும் வருவாயை கோவில் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும்.இவ்வாறு, அர்ஜுன் சம்பத் கூறினார்.

இது போல் பல்வேறு இந்து அமைப்புகளும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களில் பலர், வாடகைக்கு வர்த்தகம் செய்கின்றனர். சிலர் குடியிருக்கின்றனர். அதிலிருந்து நியாயமான வருவாய் கோவிலுக்கு வருவதில்லை. இன்னும் பல கோவில்களில், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.அரசு கட்டடங்கள், அரசு தானியக்கிடங்குகள் பெரும்பாலானவை, கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிலங்களை மீட்டு, குத்தகை பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு கொடுத்து, முறையாக வரும் வருவாயை கோவில் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar