Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக ... மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள் மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடுமணல் கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொடுமணல் கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

17 செப்
2020
03:09

சென்னிமலை: சென்னிமலை அருகே நடந்து வரும் அகழாய்வு பணியில், பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. தற்போது, இந்திய தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில், உதவி தொல்லியலாளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுனர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில், கொடுமணல் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகள், வெள்ளி, செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருட்களை கண்டுபிடித்தனர். தற்போது, கல்லறைகள் இருந்த பகுதியில் ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான மூன்று பானை முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்து கிடந்தன. இதில், ஒரு பானையை நேற்று முன்தினம் புதுச்சேரி பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வு துறை துணை இயக்குனர் சிவானந்தம், கீழடி அகழாய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மண் நிரம்பி கிடந்த அந்த பானையில், (முதுமக்கள் தாழி) மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள் மற்றும் கை, கால் எலும்புகள் ஆகியவை இருந்தன. இதில் சில மாதிரிகளை டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஆய்வுக்குழுவினர், மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்து சென்றனர். தற்போதைய ஆய்வில், கல்மணிகளும், பிராமி எழுத்துக்களையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த அகழாய்வு பணி வரும், 30- வரை நடைபெறும். இத்தகவலை, இந்திய தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar