Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி வழிபாடு: பெருமாள் ... எளிமையாக நடக்க இருக்கும் தசாரா பண்டிகை எளிமையாக நடக்க இருக்கும் தசாரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புட்டபர்த்தியில் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புட்டபர்த்தியில் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி

பதிவு செய்த நாள்

26 செப்
2020
10:09

 புட்டபர்த்தி : ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், நாளை (செப்., 27) முதல், புட்டபர்த்தி சாய் பிரசாந்தி நிலையத்தின் சத்ய சாய்பாபா ஆஸ்ரமத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தியில், சத்திய சாயி பாபாவின் ஆஸ்ரமமான பிரசாந்தி நிலையம் உள்ளது. ஊரடங்கால், ஆஸ்ரமத்துக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், நாளை முதல், பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, பிரசாந்தி நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சாய் குல்வந்த் அரங்கில், காலை ஆரத்திக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பிரசாந்தி நிலைய ஆஸ்ரமத்தின் கணேஷ் நுழைவு வாயில் மற்றும் கோபுரம் நுழைவு வாயில் வழியாக வரலாம். தினமும், காலை, 9:30 மணி முதல், 10:30 மணி வரையிலும்; மாலை, 6:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். நுழைவு வாயில்களிலேயே, பக்தர்களின் உடல் வெப்ப நிலை மற்றும் கொரோனா தொடர்பாக பரிசோதனைகள் செய்யப்படும். அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும். பக்தர்கள், சொந்தமாக கிருமி நாசினி மருந்து கொண்டு வரலாம். சமூக விலகல் போன்ற கொரோனா விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். ஆஸ்ரமத்தின் உள்ளே கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது. லக்கேஜ், மொபைல் போன்கள் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆஸ்ரம வளாகத்துக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தங்குமிடம், உணவகம், பேக்கரி, ஷாப்பிங் சென்டர், மளிகை, காய்கறி மற்றும் பழக்கடைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சாய் குல்வந்த் அரங்கிற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மற்ற பகுதிகளுக்கு செல்ல கூடாது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar