Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி ... குப்பையில் கிடந்த கிரீடம் : கோவிலில் ஒப்படைத்த துாய்மை பணியாளர் குப்பையில் கிடந்த கிரீடம் : கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா: கொலு பொம்மை விற்பனைக்கு வந்தாச்சு!
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழா: கொலு பொம்மை விற்பனைக்கு வந்தாச்சு!

பதிவு செய்த நாள்

01 அக்
2020
10:10

பொள்ளாச்சி: இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழாவுக்காக, விற்பனைக்கு அழகாக கொலு பொம்மைகள் வந்துள்ளன. பண்டிகையை வீடுகளில் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழா, முப்பெரும் தேவியரை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், நவராத்திரி என்றும், மற்ற மாநிலத்தில், தசரா, துர்கா பூஜை என்ற பெயரிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழா, முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்கின்றனர். குழந்தைகளிடம் ஆன்மிக சிந்தனை வளர்க்கவும், அவர்களுக்கு கடவுள் வேடமிட்டு மகிழ்வதும், உறவுகள், அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டும் வகையில், கொலுவுக்கு அழைக்கும் விதம் என ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறப்பு பெற்றது.நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள் மற்றும் வீடுகளில், ஏழு மற்றும் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, பலவிதமான பொம்மைகள் அடுக்கப்படும். இந்தாண்டு வரும், 17ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவை கொண்டாட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொள்ளாச்சி சர்வோதயா சங்கத்தில், கொலு பொம்மைகள் விற்பனைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.அதில், அத்தி வரதர், அஷ்ட லஷ்மி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ஒன்பது வகையான நரசிம்மர், ராமர் பொம்மைகள், என, 50க்கும் மேற்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொம்மைகள், 70 ரூபாயில் இருந்து, 1,390 ரூபாய் வரை சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.பொள்ளாச்சி சர்வோதாய சங்கத்தினர் கூறுகையில், நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் பார்வைக்காக படிகட்டுகள் அமைத்து கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. புதுவிதமான பொம்மைகள் வந்துள்ளன, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar